சுரேஷ் கல்மாடி
சுரேஷ் கல்மாடி (Suresh Kalmadi)(கன்னடம்: ಸುರೇಶ್ ಕಲ್ಮಾಡಿ)(பிறப்பு மே 1, 1944) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் மூத்த விளையாட்டுத்துறை நிர்வாகி. காங்கிரசுக் கட்சி உறுப்பினர். இந்திய ஒலிம்பிக் சங்கம், ஆசிய தடகள விளையாட்டுச் சங்கம், மற்றும் இந்திய தடகள விளையாட்டுக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராக உள்ளார்.[2]. இளமை வாழ்வு, படைத்துறை பணியாற்றம்சுரேஷ் கல்மாடி புனேயிலுள்ள புனித வின்சென்ட் உயர்நிலைப்பள்ளியிலும் பின்னர் ஃபெர்குசன் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1964ஆம் ஆண்டு புனேயின் இந்திய தேசிய படைத்துறை அகாதெமியிலும் பின்னர் ஜோத்பூர் மற்றும் அலகாபாத்தில உள்ள வான்படை பறக்கும் கல்லூரியிலும் இணைந்தார். அரசியல் வாழ்வு1977ஆம் ஆண்டு இந்திய இளைஞர் காங்கிரசின் புனே நகரத் தலைவராகவும் பின்னர் 1978-80 களில் மகாராட்டிரத்தின் இளைஞர் காங்கிரசுத் தலைவராகவும் பணியாற்றினார். 1982 முதல் 1995 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக மூன்று முறை தொடர்ந்தும் மீண்டும் 1998ஆம் ஆண்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு 11வது மக்களவை உறுப்பினராகவும் 2004ஆம் ஆண்டு 14வது மக்களவையின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது புனே நகரின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.1995-96 ஆண்டுகளில் பி. வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் இந்திய தொடர்வண்டித்துறை இணை அமைச்சராகப் பணியாற்றினார்.[3]. இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் எதிர்வரும் பொதுநலவாய விளையாட்டுக்களுக்கான ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக உள்ளார். அக்டோபர் 11, 2008 அன்று கல்மாடி புனேயில் நான்காம் முறையாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]. சர்ச்சைகள்2008 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பதக்கம் பெற்ற மூன்று விளையாட்டுவீரர்களைப் பாராட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவொன்றில் குடியரசுத் துணைத்தலைவர் அமீது அன்சாரியின் அருகே இருக்கை வழங்கப்படவில்லை என வெளியேறியதாக ஊடகச்செய்திகள் வெளியாயின.[5]. சனவரி 2010யில் முன்னாள் வளைத்தடிப் பந்தாட்ட வீரர் பர்கத் சிங், கல்மாடியை ஓர் விளையாட்டு மாஃபியா எனக் குற்றம் சாட்டினார்.[6]. 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் ஏற்பாடுகளும் பொதுப்பார்வையில் ஆய்வுசெய்யப்பட்டு வருவதுடன் முதன்மை விழிப்புப்பணி ஆணையத்தின் (Chief Vigilance Commission) மற்றும் சட்ட அமைச்சின் ஆய்வில் உள்ளன. மத்திய புலனாய்வுத்துறையும் விளையாட்டுக்கள் ஒருங்கிணைப்பில் நிகழ்ந்துள்ள சில ஊழல்களை ஆய்வு செய்யப் பணிக்கப்பட்டுள்ளது.[7]. இதன் காரணமாக, எதிர்கட்சிகள் சுரேஷ் கல்மாடியின் பதவி விலகலை நாடியுள்ளன.[8]. இந்த ஊழல் மூலம் கிடைத்தப் பணத்தை ஜெய்பீ குழு திறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் இவரது மகன் சுமீர் கல்மாடி பெரும் நொய்டா பகுதியில் உருவாக்கிவரும் F1 ஓட்டத்தளத்திற்கு செல்வதாகவும் ஊடகச் செய்திகள் வெளியாயின.[9]. ஆயினும் இவற்றை கல்மாடி மறுத்து வருகிறார்.[10]. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia