சுவாமி அகண்டானந்தர்

சுவாமி அகண்டானந்தர்
சுவாமி அகண்டானந்தர்
பிறப்பு1864 செப்டம்பர் 30
மேற்கு கல்கத்தா; அஹ்ரிடோலா
இறப்பு1937 பெப்ரவரி 7
இயற்பெயர்கங்காதர் கங்கோபாத்யாயர்
குருஸ்ரீராமகிருஷ்ணர்

சுவாமி அகண்டானந்தர் (1864 செப்டம்பர் 30 - 1937 பெப்ரவரி 7) ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் கங்காதர் கங்கோபாத்யாயர்.இவரது பெற்றோர் ஸ்ரீமந்த கங்கோபாத்யாயர்,வாமசுந்தரி.இவரது தந்தை புரோகிதரும் சமஸ்கிருத ஆசிரியருமாக இருந்தவர்.1877 ஆம் ஆண்டு பாக்பஜாரிலுள்ள தீனநாத்பாசு வீட்டிற்கு சென்றிருந்த போது இறையுணர்வில் ஒன்றியிருந்த ராமகிருஷ்ண பரமஹம்சரை முதன்முதலில் பார்த்தார். 1883 இல் அவரை சந்தித்தார். திபெத் மற்றும் இமயமலைப் பிரயாணங்களை மேற்கொண்டவர்.திபெத் மொழியை பதினைந்து நாட்களில் கற்றுக் கொண்டார்.

வங்காளத்தில் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிலவிய கடும் பஞ்சத்தை கண்ட சுவாமி அகண்டானந்தர் தம்மால் பெரிய எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என ஏங்கினார், 1897 மே 1 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண மிஷனை ஆரம்பித்தபோது பஞ்ச நிவாரணப் பணியை மேற்கொள்ளும் தீர்மானமும் எடுக்கப்பட்டது. இதுதான் ராமகிருஷ்ண மிஷனின் முதல் நிவாரணப் பணி. இப்பணிக்காக சுவாமி அகண்டானந்தர் கல்கத்தா, சென்னை நண்பர்களுக்கு கடிதம் எழுதி உதவி பெற்றார். பஞ்சம் பாதிக்கப்பட்ட மாவட்ட நீதிபதிகளும் இவருடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முன்வந்தனர். 1898 ஜூன் 15 இல் சுவாமி விவேகானந்தரும் பாராட்டி கடிதம் எழுதி ஊக்குவித்தார். .[1]

மேற்கோள்கள்

  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 652 - 709
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya