ஸ்ரீ சாரதா மடம்ஸ்ரீ சாரதா மடம் ( Sri Sarada Math ) இராமகிருஷ்ணரின் மனைவியான சாரதா தேவியின் [1] [2] பெயரால் 2 திசம்பர் 1954 இல் நிறுவப்பட்டது. விவேகானந்தரின் அறிவுறுத்தலின்படி, எட்டு சாதுக்கள் கொண்ட குழுவால் கட்டப்பட்ட இது பெண்களுக்கான துறவற அமைப்பாக செயல்படுகிறது. [3] கொல்கத்தாவின் தக்சிணேசுவரத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பு, இந்தியா முழுவதும், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் கிளை மையங்களைக் கொண்டுள்ளது. [4] இந்த மடத்தின் பெண் துறவிகள் தங்களின் நியமிக்கப்பட்ட பெயருக்கு முன் "பிரவ்ராஜிகா" என்ற பட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். மேலும் பொதுவாக "மாதாஜி" என்று அழைக்கப்படுவார்கள், அதாவது 'மதிப்பிற்குரிய தாய்' எனப் பொருள்படும். [5] [6] [7] கண்ணோட்டம்சாரதா மடம் இராமகிருஷ்ண ஆணைக்கு இணையாக பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சுதந்திரமான துறவற அமைப்பாகும். இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், சாதி, மதம், தேசம் மற்றும் பெண்களின் மேம்பாடு மற்றும் அதிகாரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மனிதர்களில் உள்ள கடவுளுக்கு சேவை செய்யும் 'சிவ ஞான ஜீவ சேவை' என்ற சுவாமி விவேகானந்தரின் பணியை நிறைவேற்றுவதாகும். [8] [9] இந்த அமைப்பு முக்கியமாக வேதாந்தத்தின் அத்வைதம் மற்றும் நான்கு யோக இலட்சியங்கள் ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் போன்ற இந்துத் தத்துவங்களை பிரச்சாரம் செய்கிறது.[10] மதம் மற்றும் ஆன்மீக போதனைகள் தவிர, இந்த அமைப்பு இந்தியாவில் கல்வி மற்றும் தொண்டுப் பணிகளை மேற்கொள்கிறது. இந்த பணியானது கர்ம யோகத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இது கடவுளுக்கு அர்ப்பணிப்புடன் செய்யப்படும் தன்னலமற்ற வேலையின் கொள்கையாகும். சாரதா மடம் மற்றும் அதன் சகோதர அமைப்பான இராமகிருஷ்ண சாரதா இயக்கம், பல முக்கியமான வேதாந்தம் மற்றும் இராமகிருஷ்ணர்-விவேகானந்தர் நூல்களை வெளியிடுகின்றன. இராமகிருஷ்ண இயக்கத்தின் சகோதர அமைப்பான இது,[11] கொல்கத்தாவின் தக்சிணேவரத்தில் அதே தலைமையகத்தைப் பகிர்ந்து கொள்கிறது. [12] சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia