செஞ்சேரி

செஞ்சேரி அல்லது செஞ்சேரி பிரிவு என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஓர் நான்முக ரோடு சந்திப்பு ஆகும்.இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்லடம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.

செஞ்சேரி பிரிவு
—  சந்திப்பு  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி கோயம்புத்தூர்
மக்களவை உறுப்பினர்

கணபதி ப. ராஜ்குமார்

சட்டமன்றத் தொகுதி சூலூர்
சட்டமன்ற உறுப்பினர்

வி. பி. கந்தசாமி (அதிமுக)

மக்கள் தொகை 998
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


போக்குவரத்து

தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகம். இவை மட்டுமல்ல இவ்வூருக்கு திருப்பூர் - பொள்ளாச்சி சாலையில் பத்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து செல்கிறது.இவை தவிற ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து உள்ளது.

மக்கள் தொகை

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இவ்வூரில் 998 மக்கள் வசிக்கின்றனர்.இவற்றுள் ஆண்கள் 49% பெண்கள் 51%வசிக்கின்றனர்.

காவல் நிலையம்

பெயரளவில் சுல்தான் பேட்டை காவல் நிலையம் என்றிருந்தாலும் அதன் இருப்பிடமாக செஞ்சேரி பிரிவே உள்ளது. சுல்தான் பேட்டையில் இட வசதி இல்லாததாலும் சாலை இன்னும் சிறுவழிப் பாதையாகவே உள்ளது. இதனால் காவல் நிலையம் செஞ்சேரி பிரிவில் தொடங்கப்பட்டது. முக்கிய காரணமாக திருப்பூர் மாவட்டம் உருவாக்குவதற்கு முன்பு காமநாயக்கன்பாளையம் காவல் நிலையம் இருந்து வந்தது. பின் இப்பகுதி கோவை மாவட்டத்தில் வருவதால் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று செஞ்சேரி பிரிவு காவல் நிலையம் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya