கணபதி ப. ராஜ்குமார்
கணபதி ப. ராஜ்குமார் (Ganapathi P. Raj Kumar) என்பவர் 2011-16 ஆண்டு காலகட்டத்தில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாநகரின் 5வது மேயராக இருந்தவர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த செ. மா. வேலுச்சாமிக்கு அடுத்தபடியாக இப்பபதவிக்கு தேர்ந்தெடுக்கப்படார். இவர் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சின் நந்தகுமாரை தோற்கடித்து மேயரானார். [1] இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவராவார், 2021 டிசம்பர் 21-ம் தேதி அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்தியப் பொதுத் தேர்தல் 2024-ல் கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு[2] வெற்றிபெற்றார். முந்தைய வாழ்க்கையும் கல்வியும்ராஜ்குமார் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பட்டமும், மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலை பட்டமும், சட்டப் பட்டப்படிப்பும் முடித்தார். பின்னர் அவர் தனது முனைவர் பட்டத்தை பத்திரிகை மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முடித்தார்.[3] அரசியல்1989 ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்த ராஜ்குமார், 2001 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற உறிப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக சார்பில் கணபதி பி. ராஜ்குமார் 2.91 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் நந்தகுமாரை தோற்கடித்தார். இந்த தேர்தலில் திமுக, இந்திய தேசிய காங்கிரசு ஆகிய இரு கட்சிகளும் கலந்துகொள்ளவில்லை. அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் 4,20,104 வாக்குகளும், பாஜக வேட்பாளர் நந்தகுமார் 128,761 வாக்குகளும் பெற்றனர். இந்த இருவரையும் அடுத்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) சி. பத்மநாபன் தேர்தலில் 31,000 வாக்குகள் பெற்றார். இத்தேர்தலின் முடிவில் கோவை மாநகராட்சி மேயராக கணபதி ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டார். [4] மேயராக 2014 முதல் 2016 வரை பணியாற்றினார்.[5] இவர் அதற்கு முன்பு அதிமுக நகர மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார்.[6] அதிமுக தலைவர்களால் ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்த ராஜ்குமார் 21 திசம்பர் 2020 அன்று மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.[7][8] இவர் தற்போது கோவை மாவட்ட கழக அவைத் தலைவராக உள்ளார்.[3] 2024 இந்தியப் பொதுத் தேர்தலில், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் அண்ணாமலையை வெற்றிகொண்டார். தேர்தல்கள்மக்களவைத் தேர்தல்
மாநகராட்சி மேயருக்கான நேரடித் தேர்தல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia