செயராமன் கெளரிசங்கர்

செயராமன் கெளரிசங்கர்
Jayaraman Gowrishankar
பிறப்பு 1956 (அகவை 68–69)
சென்னை, இந்தியா
வதிவு இந்தியா
தேசியம் இந்தியர்
துறைஉயிரியல்
நிறுவனம்உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம்

டி. என். ஏ. கைரேகை மற்றும் ஆய்ந்தறிதழ் மையம்

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள், மொகாலி[1]
Alma materசென்னைப் பல்கலைக்கழகம், மெல்பேர்ண் பல்கலைக்கழகம்

செயராமன் கெளரிசங்கர் (Jayaraman Gowrishankar) (பிறப்பு 1956) என்பவர் இந்திய மருத்துவ நுண்ணுயிரியலாளர். கெளரிசங்கர் வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றார். மெல்பர்ண் பல்கலைக்கழகத்தில் பாக்டீரியா மரபியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் விஞ்ஞானி மற்றும் குழுத் தலைவராக இருந்தார். 2000ஆம் ஆண்டில், டி.என்.ஏ கைரேகை மற்றும் ஆய்ந்தறிதழ் மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[2]

1991ஆம் ஆண்டில், உயிரியல் அறிவியல் பிரிவில் இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் விரிதினை பெற்றார்.[3] மேலும் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் பத்மஸ்ரீ 2013இல் இவருக்கு வழங்கப்பட்டது.

இந்திய அரசு விருது

ஆராய்ச்சி விருதுகள்

  • இளம் விஞ்ஞானிகளுக்கான இந்தியத் தேசிய அறிவியல் கழக பதக்கம், 1986
  • சி.எஸ்.ஐ.ஆர் இளம் விஞ்ஞானி விருது, 1987
  • பி.எம் பிர்லா பரிசு. 1991
  • 1991ஆம் ஆண்டிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் பரிசு
  • ஜே.சி.போஸ் ஆய்வு நிதி, 2007
  • 2012 மொசெலியோ ஸ்கேச்ச்டர் சிறப்புச் சேவை விருது - அமெரிக்கன் நுண்ணுயிரியல் சமூகம்

ஆராய்ச்சி சிறப்பம்சங்கள்

  • ஓபரான் கண்டுபிடிப்பு மற்றும் அதன் நேர்த்தியான சவ்வூடுபரவல் கட்டுப்பாடு
  • நச்சு ஆர்.என்.ஏ-டி.என்.ஏ கலப்பினங்கள் (ஆர்-சுழல்கள்) ஈ கோலியில் மொழிபெயர்க்கப்படாத புதிய டிரான்ஸ்கிரிப்டுகளிலிருந்து ஏற்பட வாய்ப்புள்ளது என்ற புதிய கருதுகோளின் விளக்கம்.

மேற்கோள்கள்

  1. Gowrishankar is new IISER director, 'Hindustan Times'
  2. Currently, he is the director of the [தொடர்பிழந்த இணைப்பு]Indian Institute of Science Education and Research, Mohali. He The American Society for Microbiology honors Jayaraman Gowrishankar
  3. "INSA". Archived from the original on 4 March 2016. Retrieved 16 June 2012.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya