க. சீ. கிருட்டிணன்
சர், கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan, கே. எசு. கிருட்டிணன்), டிசம்பர் 4 1898 – சூன் 14 1961) ஒரு புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர் ஆவார். ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற சர். சி. வி. இராமன் உடன் இணைந்து இவரும் இக் கண்டுபிடிப்பில் பங்கு கொண்டார். ராமன் விளைவு சம்பந்தமாக கிருஷ்ணன் ராமனுடன் இணைந்து 1927-ம் ஆண்டு முதல் 1929 வரை ஒளி விலகல் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகளை ‘நேச்சர்’ (Nature) என்ற இதழில் (சுமார் 20 கட்டுரைகள்) எழுதியுள்ளார். காந்தப் படிகங்கள் பற்றியும், சின்தெடிக் இயற்பியல் அடிப்படை விதிகள் குறித்தும் ஆய்வுசெய்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார். அணு ஆயுதத்துக்கு எதிராக சமாதான நோக்கில் உருவாகிய பக்வாஸ் இயக்கம் போன்ற பல்வேறு தளங்களில் இவரது பங்களிப்பு இருந்தது.[1] வாழ்க்கைகரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன், பொதுவாக கே. எசு. கிருட்டிணன் (K. S. Krishnan) அல்லது கே.எசு.கே (KSK) என்றே அறியப்பட்டார். இவர் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு (Watrap) அருகில் அமைந்துள்ள விழுப்பனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை வேளாண்மைத் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும் அறிவும் கொண்டிருந்தார். கிருட்டிணன், திருவில்லிப்புத்தூரில் இருந்த ஜி. எஸ். இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவர் 1940 இல் பிரித்தானியாவில் உள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்வு செய்யப்பட்டார். 1946 இல் செவ்வீரர் (சர், knight) என்று பெருமைப்படுத்தப்பட்டார். 1954 ஆம் ஆண்டும் இந்தியாவின் பத்ம பூசன் விருது பெற்றார்[2]. 1961 இல் ரசாயன விஞ்ஞானங்களுக்காக சாந்தி ஸ்வருப் பட்னாகர் நினைவுப் பரிசு பெற்றார். இவரை பெருமைப்படுத்தும் விதமாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் அரங்கத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டு, அந்த அரங்கத்தின் முன்பு இவர் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.[3] தலைநகர் டெல்லியில் ஒரு சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. வகித்த பதவிகள்
கிருட்டிணன் தமிழில் எழுதிய கட்டுரைகள்
கிருட்டிணன் பற்றிய புகழ்ச்சொற்கள்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia