இராமன் பரிமளா
இராமன் பரிமளா (Raman Parimala, பிறப்பு: நவம்பர் 21, 1948)[1] ஓர் இந்திய கணிதவியலாளர். இவர் இயற்கணிதத் துறையில் (algebra) செய்த ஆய்வுகளுக்காக புகழ்பெற்றவர். இவர் அமெரிக்காவில் உள்ள எமறி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.[2] இப்பொறுப்புக்கு முன்பு பல ஆண்டுகளாக இந்தியாவில் மும்பையில் உள்ள டாட்டா அடிப்படை ஆய்வுக் கழகத்தில் (டி.ஐ.எவ்.ஆர்) இருந்தார். பின்புலம்பரிமளா இந்தியாவில் தமிழ்நாட்டில் வளர்ந்தார்.[3] சாரதா வித்தியாலயா பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பயின்று, சென்னையில் உள்ள இசிட்டெல்லா மாரிசுக் கல்லூரியில் பயின்று 1970 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழத்தில் அறிவியல் முதுநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் டாட்டா அடிப்படை ஆய்வுக் கழகத்தில் நெறியாளர் இரா. சிறீதரனிடம் பயின்று மும்பைப் பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்[4] சில ஆய்வுக் கட்டுரைகள்
பெருமைகள், பரிசுகள்பரிமளா சூரிக்கல் 1994 இல் நடந்த அனைத்துலக கணிதவியலாளர்கள் பேராயத்தில் அழைப்புப் பேச்சாளராக இருந்தார்; 2010 ஆம் ஆண்டும் ஐதராபாத்தில் நடந்த பேராயத்தில் சிறப்புச் சொற்பொழிவாளராக இருந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia