அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் விருது
டி. ஆர். இராமதாசு (T. R. Ramadas) என்பவர் ஒர் இந்திய கணித வல்லுநர் ஆவார். இவர் 1955 ஆம் ஆண்டு மார்ச்சு 30 ஆம் நாள் பிறந்தார். திருவனந்தபுரம் இராமகிருட்டிணன் இராமதாசு என்று இவர் அறியப்படுகிறார். இயற் கணிதம், வகையீட்டு வடிவில், கணித இயற்பியல் ஆகிய பிரிவுகளில் இவர் நிபுணத்துவம் மிக்கவராக இருந்தார். இந்தியாவில் அறிவியல் துறைக்கான உயர்ந்த விருதாகக் கருதப்படும் சாந்தி சுவரூப் பட்நாகர் விருது 1998 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்காக கணித அறிவியல் பிரிவுக்காக இவருக்கு வழங்கப்பட்டது.[1][2]
கான்பூரிலுள்ள இந்திய தொழிநுட்ப நிறுவனத்தில் கல்வி கற்ற டி. ஆர். இராமதாசு, பின்னர் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் இயற்பியலில் ஒரு பட்டதாரி மாணவராகச் சேர்ந்த இவர் எம்.எசு.நரசிம்மனுடன் நிகழ்த்திய உரையாடல்களுக்குப் பின்னர் கணிதத்திற்கு மாறினார்.
↑"Ramadas Ramakrishnan". International Centre for Theoretical Physics. Archived from the original on 3 ஜனவரி 2012. Retrieved 26 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)