செவிலிமேடு
செவிலிமேடு (ஆங்கிலம்:Sevilimedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகும். செவிலிமேடு பாலாற்றின் கரையில் உள்ளது. இது காஞ்சிபுரத்திற்கு தென்மேற்கே 4.1 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது.உள்ளது. செவிலிமேடு காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]முன்னர் இது ஒரு பேரூராட்சியாக இருந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. சிறப்புசெவிலிமேட்டில் இராமானுஜர் பயன்படுத்திய சாளக்கிராம கிணறும், இலக்குமி நரசிம்மர் கோயிலும் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செவிலிமேடு பகுதியில் 6,817 வீடுகளும், 23454 மக்கள்தொகையும் கொண்டது. இதன் எழுத்தறிவு 88% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.[5] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia