காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி (Kancheepuram Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 6வது தொகுதி ஆகும். இத்தொகுதியில் 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். 15வது மக்களவைத் தேர்தல் (2009), காஞ்சிபுரம் சந்தித்த முதல் தேர்தலாகும்.
சட்டமன்ற தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில், மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
- செங்கல்பட்டு
- திருப்போரூர்
- செய்யூர் (தனி)
- மதுராந்தகம்
- உத்திரமேரூர்
- காஞ்சிபுரம்
வென்றவர்கள்
வாக்காளர்கள் எண்ணிக்கை
தேர்தல்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்கள்
|
மொத்தம்
|
ஆதாரம்
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
7,36,808
|
7,42,874
|
174
|
14,79,856
|
2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[3]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
7,94,839
|
8,24,316
|
163
|
16,19,318
|
2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[1]
|
வாக்குப்பதிவு சதவீதம்
தேர்தல்
|
வாக்குப்பதிவு சதவீதம்
|
முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு
|
ஆதாரம்
|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009
|
74.24%
|
-
|
[4]
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
75.91%
|
↑ 1.67%
|
[3]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
|
|
|
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இத்தேர்தலில் 4 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 7 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான கு. மரகதம் என்பவரை 2,86,632 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் பெ. விஸ்வநாதன், அதிமுகவின் இ. இராமகிருட்டிணனை, 13,103 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்