சேகர் (நடிகர்)
மாஸ்டர் சேகர் என்று அறியப்படும் ஜே. வி. சேகர் (7 சனவரி 1963 - 8 யூலை 2003) என்பவர் ஒரு இந்திய குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் முதன்மையாக தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார். துவக்க வாழ்க்கையும் தொழிலும்சேகர் 7, சனவரி, 1963 அன்று பிறந்தார். இவர் நான்கு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1968 ஆம் ஆண்டு குடியிருந்த கோயில் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ்த் திரையிலகில் அறிமுகமானார். [1] மணிப்பயல், ஓ மஞ்சு உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இவர் பல திரைப்படங்களில் தனது குழந்தை நடிப்பிற்காக பிரபலமானார். இவர் மாஸ்டர் சேகர் என்று அழைக்கப்பட்டார். இதய வீணை, குடியிருந்த கோயில் உள்ளிட்ட படங்களில் எம்.ஜி.ஆரின் குழந்தைப் பருவ வேடங்களில் நடித்தார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் ஒளிப்பதிவாளர் ஜே. வி. விஜயத்தின் மகன் ஆவர். [1] இவர் 2003 சூலை 8 அன்று சென்னையில் தனது வீட்டின் முதல் மாடியில் இருந்து விழுந்து இறந்தார். [2] [3] பகுதி படத்தொகுப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia