சைக்கோ (2020 திரைப்படம்)
சைக்கோ (Psycho) என்பது 2020 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த உளவியல் அதிரடித் திரைப்படமாகும். இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் கீழ் அருண் மொழி மாணிக்கம் தயாரித்திருதார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி, அறிமுக நடிகர் இராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் நடித்துள்ளனர். ரேணுகா, சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன், ஷாஜி சென் ஆகியோரும் துணை வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் ஒலிப்பதிவை இளையராஜா மேற்கொண்டிருந்தார்.[1][2][3] தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். என். அருண்குமார் இப்படத்தை தொகுத்துள்ளார். படத்தின் தயாரிப்பு செப்டம்பர் 2018இல் தொடங்கியது, இந்த படம் 2020, ஜனவரி 24 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. சுருக்கம்மனநோயாளியான அங்குலிமாலா (இராஜ்குமார் பிசுசுமணி) தொடர்ச்சியாக பெண்களின் தலைகளை துண்டிக்கிறார். அவர்களின் தலைகளை அவன் சேகரித்து வருகிறான். ஒரு முன்னணி வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரான தாகினி (அதிதி ராவ் ஹைதாரி) சைக்கோவால் கடத்தப்படுகிறாள். அவன் இவளது தலையைத் துண்டிக்க முற்படும்போது கௌதம் (உதயநிதி ஸ்டாலின்) தன்னைக் காப்பாற்ற வருவார் என்று கூறுகிறாள். இதற்கிடையில், முன்னால் காவல் உதவி ஆய்வாளரான கமலாவின் (நித்யா மேனன்) துணையை நாடி கௌதம் செல்கிறான். கௌதம் சைக்கோவைக் கண்டுபிடித்து, தாகினியைக் காப்பாற்றுவாரா என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது. நடிகர்கள்
தயாரிப்புஇயக்குநர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலினை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார்.[4] அருண் மொழி மாணிக்கத்தின் டபுள் மீனிங் புரொடக்ஷன் பதாகையின் கீழ், மிஸ்கின் அதிதிராவ் ஹைதாரி, நித்யா மேனன், இராஜ்குமார் பிச்சுமணி, மற்றும் ராம் ஆகிய நடிகர்களை இறுதி செய்தனர். அதே நேரத்தில் இயக்குனரின் முந்தைய படங்களான நந்தலாலா மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகியவற்றில் பணி புரிந்த இசையமைப்பாளர் இளையராஜா படத்தின் இசைப் பணிகளை மேற்கொண்டார்.[5][6][7] படத்தின் படப்பிடிப்பு 2018 செப்டம்பர் தொடக்கத்தில் தொடங்கியது. அந்த மாத இறுதியில் முதல் பார்வை விளம்பரச் சுவரொட்டி வெளியிடப்பட்டது, இது சைக்கோ என்ற திட்டத்தின் தலைப்பை வெளிப்படுத்தியது.[8] படத்தின் இரண்டாவது அட்டவணை 2018 திசம்பர் தொடக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மலை நகரங்களில் படமாக்கப்பட்ட பின்னர் நிறைவடைந்தது.[8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia