சோசா விக்கிப்பீடியா
சோசா விக்கிப்பீடியா (Xhosa Wikipedia) சோசா மொழி விக்கிப்பீடியா ஆகும். இதில் 2,284 தரவுகள் உள்ளன. இது 25 ஆகஸ்ட் 2018 நிலவரப்படி 260வது பெரிய விக்கிப்பீடியாவாக திகழ்கிறது.[1] விக்கிப்பீடியாவின் சோசா பதிப்பு ஜூன் 2003இல் தொடங்கப்பட்டது.[2] இதன் குறைந்த எண்ணிக்கையிலான தரவுகள் காரணமாக 2008[3] மற்றும் 2013[4] ஆம் ஆண்டுகளில் இச்சேவையினை நிறுத்துவதற்காகக் கோரப்பட்ட வேண்டுகோள் இரண்டும் நிராகரிக்கப்பட்டன. சோசா சுலு மற்றும் நகுனி மொழிகளில் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. சுலு பதிப்பில் உள்ள கட்டுரைகளை சோசா மொழியில் சோசா விக்கிப்பீடியாவிற்கு மொழிபெயர்ப்பது எளிதாக உள்ளது. விக்கிமீடியாவின் ஸ்கான்விக்கி ஒத்துழைப்பு கருவி மூலம் சுவீடிய விக்கிப்பீடியா, நோர்வே விக்கிப்பீடியா மற்றும் டேனிய விக்கிப்பீடியா போன்ற எசுக்காண்டினாவியா மொழி பதிப்புகளுக்கு இதேபோன்ற மொழியாக்க-விக்கி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் காண்கமேற்கோள்கள்மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia