சோடியம் புரோமேட்டு முக்கியமாக கந்தகம் அல்லது வாட் வகை சாயங்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான அல்லது தொகுதி சாயமிடுதல் செயல்முறைகளில் பயன்படுகிறது. இதைத்தவிர, தங்கச் சுரங்கங்களில் தங்கத்தினை கரைக்க ஒரு கரைப்பானாக, தலைமுடி அலங்காரம் மற்றும் வேதியியல் முகவர் எனப்பலவாறாகப் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
புரோமினைசோடியம் கார்பனேட்டுகரைசல் வழியாகச் செலுத்தி சோடியம் புரோமேட்டு தயாரிக்கப்படுகிறது. சோடியம் புரோமைடை மின்னாற்பகுப்பு முறை ஆக்சிசனேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம். 80 செல்சியசு வெப்பநிலையில் சோடியம் ஐதராக்சைடுடன் புரோமினையும் [[குளோரின்|குளோரினையும்[[ சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்தும் சோடியம் புரோமேட்டை தயாரிக்கலாம்.
தீங்குகள்
குடிநீரில் புரோமேட்டு கலந்திருப்பது விரும்பத்தகாதது ஆகும். ஏனெனில் இது மனித உடலில் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டுள்ளது என சந்தேகிக்கப்படுகிறது [1][2] கோகோ கோலாவின் தசானி என்ற புட்டியடைப்பு தண்ணீரில் அதன் இருப்பு இங்கிலாந்தில் அந்த தயாரிப்பை மீண்டும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தியது. நினைவுபடுத்தியது[3].
மேற்கோள்கள்
↑"Potassium Bromate (Group 2B)". International Agency for Research on Cancer: Summaries and Evaluations. Canadian Centre for Occupational Health and Safety. Retrieved 2008-03-09.