கால்சியம் புரோமேட்டு
கால்சியம் புரோமேட்டு (Calcium bromate) என்பது , Ca(BrO3)2•H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்[2]. புரோமிக் அமிலத்தினுடைய கால்சியம் உப்பு கால்சியம் புரோமேட்டு எனக் கருதப்படுகிறது. பெரும்பாலும் Ca(BrO3)2•H2O என்ற வாய்ப்பாடு கொண்ட ஒற்றை நீரேற்று வடிவில் இது கிடைக்கிறது. தயாரிப்புகால்சியம் ஐதராக்சைடுடன் சோடியம் புரோமேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக கால்சியம் புரோமேட்டு தயாரிக்கப்படுகிறது. கால்சியம் சல்பேட்டுடன் பேரியம் புரோமேட்டைச் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம். பண்புகள்180 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் கால்சியம் புரோமேட்டு சிதைவடைந்து கால்சியம் புரோமைடையும் ஆக்சிசனையும் [2] கொடுக்கிறது. கால்சியம் புரோமைடு கரைசலை மின்னாற்பகுப்பு செய்வதன் வழியாகவும் கால்சியம் புரோமேட்டு கிடைக்கும் எனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ924பி என அடையாளமிடப்பட்டு சில நாடுகளில் ரொட்டி தயாரித்தலில் இதைப் பயன்படுத்துகிறார்கள்[3]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia