சோடியம் அயோடேட்டு
சோடியம் அயோடேட்டு (Sodium iodate ) என்பது NaIO3 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய அயோடிக் அமிலத்தின் சோடியம் உப்பு ஆகும். இது ஒரு ஆக்சிசனேற்றியாகவும் ஆக்சிசன் ஒடுக்கிகளுடன் அல்லது எரியும் பொருட்களுடன் தொடர்பு கொள்ள நேரிடும்போது தீப்பிடித்து எரியக்கூடியதாகவும் உள்ளது. தயாரிப்புசோடியம் ஐதராக்சைடு போன்ற சோடியத்தைப் பகுதிப்பொருளாகக் கொண்டுள்ள காரங்கள் அயோடிக் அமிலத்துடன் வினைபுரிவதால் சோடியம் அயோடேட்டு கிடைக்கிறது.
சூடாகவுள்ள அடர் சோடியம் ஐதராக்சைடு கரைசலுடன் அல்லது அதனுடைய கார்பனேட்டுடன் அயோடின் சேர்ப்பதன் மூலமாகவும் இதைத் தயாரிக்க முடியும்.
வினைகள்ஐப்போ குளோரைட்டுகள் அல்லது வேறு வலுவான ஆக்சிசனேற்றிகளால் நீர் கரைசலிலுள்ள சோடியம் அயோடேட்டை பர்ரயோடேட்டுகளாக ஆக்சிசனேற்றம் செய்ய முடியும்.
பாதுகாப்புவெப்பம் (இயற்பியல், அதிர்வு, உராய்வு, எளிதில் எரியும் பொருட்கள், ஆக்சிசன் ஒடுக்கிகள், அலுமினியம், கரிமச் சேர்மங்கள், கார்பன், ஐதரசன் பெராக்சைடு, சல்பைடுகள் போன்றவை சோடியம் அயோடேட்டுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டியது முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia