சோடியம் பைபுளோரைடு
சோடியம் பைபுளோரைடு (Sodium bifluoride) என்பது NaHF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் நேர்மின் அயனியும் (Na+) பைபுளோரைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து சோடியம் பைபுளோரைடு (HF2−) உருவாகிறது. வெண்மை நிறத்தில் நீரில் கரையக்கூடிய உப்பான இது சூடுபடுத்தினால் சிதைவடைகிறது [2]. சோடியம் பைபுளோரைடு எளிதில் தீப்பற்றாது. காரச் சுவை கொண்ட இச்சேர்மம் நீருறிஞ்சும் தன்மை கொண்டதாகும். இது தொழிற்சாலைகளில் பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது [3]. வினைகள்சோடியம் பைபுளோரைடு ஐதரோபுளோரிக் அமிலமாகவும் சோடியம் புளோரைடாகவும் பிரிகை அடைகிறது.
மின்னாற்பகுப்பின் மூலம் உருவாகும் புளோரின் வாயுவின் (F2) மூலம் இவ்வினையின் தலைகீழ் வினையை நிகழச்செய்து HF நீக்கப்படுகிறது[4]. உப்பு கரையும்போதும் திண்மம் சூடுபடுத்தப்படும்போதும் சமநிலை வெளிபடுத்தப்படுகிறது. மற்ற பைபுளோரைடுகள் போலவே அமிலங்களுடன் வினைபுரியும்போது ஐதரசன் புளோரைடை உருவாக்குகிறது. உதாரணமாக பைசல்பேட்டுடன் இது வினைபுரிந்து சோடியம் சல்பேட்டையும் ஐதரசன் புளோரைடையும் கொடுக்கிறது. வலிமையான காரங்கள் பைபுளோரைடை புரோட்டானேற்ற நீக்கம் செய்கின்றன.கால்சியம் ஐதராக்சைடு கால்சியம் புளோரைடைக் கொடுத்தல் இதற்கான உதாரணமாகும். [5]. தயாரிப்புசூப்பர்பாசுப்பேட்டு உரங்களை உற்பத்தி செய்யும்போது கழிவாகக் கிடைக்கும் ஐதரசன் புளோரைடை நடுநிலையாக்கம் செய்யும்போது சோடியம் பைபுளோரைடு கிடைக்கிறது. சோடியம் கார்பனேட்டும் சோடியம் ஐதராக்சைடும் இவ்வினைக்கான குறிப்பிடத்தகுந்த காரங்களாகும். இரண்டு படிநிலைகளில் இவ்வினை நிகழ்கிறது .[4]
தண்ணீர் அல்லது ஈரக்காற்றுடன் சோடியம் பைபுளோரைடு வினைபுரிந்து ஐதரோபுளோரிக் அமிலம் உருவாகிறது. மேலும் வாயுநிலைக்கு சூடாக்கும்போதும் இது ஐதரோபுளோரிக் அமிலத்தையும் ஐதரசன் வாயுவையும் கொடுக்கிறது. வலிமையான அமிலங்கள், வலிமையான காரங்கள், உலோகம், தண்ணீர் அல்லது கண்ணாடி ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்படும்போது இது சிதைவடைகிறது [3]. குரோமைல் குளோரைடு, நைட்ரிக் அமிலம், சிவப்பு பாசுபரசு, சோடியம் பெராக்சைடு, டையீத்தைல் சல்பாக்சைடு மற்றும் டையெத்தில் துத்தநாகம் ஆகியவற்றுடன் தீவிரமான வினையையும் இது வெளிப்படுத்துகிறது. பயன்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia