கால்சியம் புளோரைடு (Calcium fluoride) என்பது கால்சியம் மற்றும் புளோரின் ஆகிய தனிமங்கள் இணைந்த CaF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது வெண்ணிறத்தை உடைய, நீரில் கரையாத ஒரு திண்மம் ஆகும். இது தன்னில் கலந்துள்ள மாசுகளின் காரணமாக, அடர்ந்த நிறமுடைய புளோரைட்டு (ஃபுளோர்ஸ்பார் எனவும் அழைக்கப்படுகிறது) என்ற கனிமூலத்தில் கிடைக்கப் பெறுகிறது.
வேதியியல் அமைப்பு
இந்தச் சேர்மமானது ஒரு கன சதுர வடிவ அலங்கார வடிவமான புளோரைட்டு வடிவத்தில் படிகமாகிறது.
இரண்டு சமானமான நோக்குகளிலிருந்து பார்க்கப்பட்ட, புளோரைட்டு வடிவம் என அழைக்கப்படும் CaF2 சேர்மத்தின் அலகுக்கூடு, இரண்டாவது தோற்றம் பெரும்பாலும் நேரயனியின் மீது புள்ளிக் குறைபாடுள் நுழைந்த நிலையில் பார்க்கப்படுகிறது..[4]
Ca2+ அயனியானது எட்டு ஈந்திணைவுக்கோளத்தின் மையத்தில், எட்டு F− அயனிகளாலான கனசதுரப் பெட்டியின் மையமாக உள்ளது. ஒவ்வொரு F− அயனி மையமும் நான்கு Ca2+ மையங்களோடு அணைவுப்பிணைப்பில் உள்ளது.[5] மிகவும் சரியான முறையில் கூட்டிணைக்கப்பட்ட படிக மாதிரிகள் நிறமற்றவையாக இருப்பினும், கனிமூலமானது பெரும்பாலும் F-மையங்கள் இருப்பின காரணமாக அடர் நிறமுடையவையாக இருக்கின்றன. இதே படிக அமைப்பானது, CeO2, கனசதுர ZrO2, யுரேனியம் டைஆக்சைடு(UO2), தோரியம் டை ஆக்சைடு(ThO2), மற்றும் புளூட்டோனியம் டை ஆக்சைடு (PuO2) போன்ற AB2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய சேர்மங்கள் யாவிலும் காணப்படுகிறது.
தயாரிப்பு
ஐதரோபுளோரிக் அமிலத்தின் முன்னோடியாக உள்ள வகையில் விரும்பத்தக்க புளோரைட்டு கனிமூலமானது மிகுதியாகவும், பரவலாகவும் கிடைக்கிறது. ஆகையைால், சிறிதளவு ஊக்குவிப்பானது CaF2 தொழிலக தயாரிப்பிற்காக நிலைத்திருக்கிறது. மிகுந்த துாய்மையான CaF2கால்சியம் கார்பனேட்டு மற்றும் ஐதரோபுளோரிக் அமிலம் ஆகியவற்றை வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது:[6]
CaCO3 + 2 HF → CaF2 + CO2 + H2O
பயன்பாடுகள்
பலதரப்பட்ட வேதிவிளைபொருட்களைத் தயாரிக்கப் பயன்படும் ஐதரசன் புளோரைடு தயாரிப்பதற்கான இயற்கையான முதன்மை மூலப்பொருளாக CaF2 இருக்கிறது. கால்சியம் புளோரைடு புளோரைட்டு நிலையில் வணிகவியல் முக்கியத்துவம் வாய்ந்த புளோரைடின் மூலப்பொருளாக இருக்கிறது.[7] கனிமூலத்தின் மீது அடர் கந்தக அமிலம் செயல்படுவதன் விளைவாக ஐதரசன் புளோரைடு விடுவிக்கப்படுகிறது.[8]
கந்தக அமிலத்துடன் வினைப்படுத்தும் போது நச்சுத்தன்மையுள்ள ஐதரோபுளோரிக் அமிலத்தை வெளியிடுகிறது. இருப்பினும் கூட இது CaF2 ஆபத்தற்றது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்முறை பாதுகாப்பு மற்றும் நலத்திற்கான தேசிய நிறுவனம் காற்றில் புளோரின் கொண்டுள்ள தூசுகள் உட்சுவாசிப்பதற்கான நிர்ணயிக்கப்பட்ட அளவாக 2.5 மிகி/மீ3[6] என்பதைப் பரிந்துரைத்துள்ளது.
↑X-ray Diffraction Investigations of CaF2 at High Pressure, L. Gerward, J. S. Olsen, S. Steenstrup, M. Malinowski, S. Åsbrink and A. Waskowska, Journal of Applied Crystallography (1992), 25, 578-581 எஆசு:10.1107/S0021889892004096
↑"Fluorides (as F)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).