ச. காமராசு
ச. காமராசு அல்லது முத்தாலங்குறிச்சி காமராசு என அறியப்படும் சங்கரசுப்பு காமராசு, தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், நாடக ஆசிரியர், வரலாற்று ஆர்வலர், பதிப்பாளர், புகைப்படக் கலைஞர், மற்றும் நடிகர் ஆவார். தொடக்க வாழ்க்கைஇன்றைய தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்தாலங்குறிச்சி என்ற சிற்றூரில் சொர்ணம்மாள் - சங்கரசுப்பு இணையருக்கு மகனாக 8 அக்டோபர் 1966 அன்று பிறந்தார் காமராசு. இவருக்கு தஙப்பாண்டியன் எனும் சகோதரரும் ஆறுமுகக்கனி எனும் சகோதரியும் உண்டு. முத்தாலங்குறிச்சி மற்றும் பாளையங்கோட்டையில் தொடக்கக் கல்வியை முடித்தபின் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். குடும்பச் சூழல் காரணமாக மகாராட்டிரத் தலைநகர் பம்பாயில் (தற்போது மும்பை) பணியாற்றினார். சில ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு திரும்பி தினத்தந்தி நாளிதழின் மதுரை கிளையில் பிழை திருத்துநராகப் பணியாற்றினார். பின் செங்கல் சூளைப் பணியாளர், பேருந்து நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டார். சாத்தான்குளம் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த எஸ். எஸ். மணி நாடாரிடம் உதவியாளராக சில காலம் பணியாற்றினார்.. பணிதன் வாழ்க்கை அனுபவங்களையும் தான் கண்டதையும் கேட்டதையும் துணுக்குகளாக, கதை, கட்டுரைகளாக எழுத ஆரம்பித்தார். முதல் படைப்பு, 6 மார்ச் 1987 அன்று தேவி வார இதழில் வெளியானது. அது முதல் தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், துணுக்குகள், சிறுகதைகளை எழுதி வந்தார். மும்பையிலிருந்து வெளியாகும் 'மராத்திய முரசு, 'போல்டு இந்தியா’ போன்ற இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகின. முத்தாலங்குறிச்சியில் 'தேன்கூடு இளைஞர் மன்றம்’ சார்பாக நடந்த இரண்டு நாடகங்களில் கதாநாயகியாகப் பெண் வேடமிட்டு நடித்தார் . தொடர்ந்து கதாநாயகனாகவும் நடித்து வந்தார். நாடகங்களுக்குக் கதை வசனமும் எழுதினார். திருநெல்வேலி வானொலி நிலையத்தில் 3 அக்டோபர் , 1988 அன்று இவர் எழுத்தில் குருவை மிஞ்சிய சீடர் என்னும் உரைச் சித்திரம் ஒலிபரப்பானது. அதன்பின் கண்டிஷன் கண்டிஷன் என்னும் நாடகமும் ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து இவரது நாடகங்கள் பல வானொலியில் ஒலிபரப்பாகத் தொடங்கின. நாளடைவில் நெல்லை வானொலியின் முக்கிய நாடக எழுத்தாளர்களுள் ஒருவரானார்.இதுவரை நெல்லை வானொலிக்காக இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கோயில் தல புராணங்களை நாளிதழ்களில் எழுத ஆரம்பித்த இவர் தற்போது கோயில்கள் தொடர்பான நூல்களையும் எழுதி வருகிறார். வரலாற்றுச் செய்திகளைத் திரட்டி நூலாக்கும் கட்டுரையாளராக தொடர்ந்து இவர் இயங்கி வருகிறார். ஆதிச்சநல்லூர்,[1] கொற்கை, தாமிரபரணி, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற வரலாற்றுச் சிறப்புள்ள பகுதிகளுக்கு களப்பணியாளராகச் சென்று ஆய்வுகள் நடத்தி இதுவரை 51 நூல்களை எழுதியுள்ளார். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியின் அறிக்கையை சமர்ப்பிக்காமல் காலங்கடத்திவந்த மத்திய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்து[2] வெற்றி கண்டார்.[3] ஆதிச்சநல்லூர் தல அருங்காட்சியகம் அமைக்கவும் மேலும் சில பகுதிகளில் அகழ்வாராய்ச்சியைத் தொடரவும் இவரது வழக்கு உதவியது. நூற்பட்டியல் (பகுதியளவு)
திரைப்பணிமேடை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பொருநை சுடர் என்ற ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
பிற பணிகள்முத்தாலங்குறிச்சியை அடுத்த செய்துங்கநல்லூரில் தன் தாயின் பெயரில் பொன்சொர்ணா ஸ்டுடியோ என்ற புகைப்பட நிறுவனத்தையும் பொன்சொர்ணா பதிப்பகம் என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். புகழ்இவரது படைப்புகளைப் பற்றி ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகள் மேர்கொள்ளப்பட்டுள்ளன. எழுத்தாளர் சு. சண்முகசுந்தரம், இவரை "தென்னாட்டுக்குக் கிடைத்த வரம்" என்றார். விருதுகள்
தனி வாழ்க்கை1996-இல் பொன் சிவகாமி என்பவரைத் திருமணம் செய்தார். இவ்விணையருக்கு அபிஷ் விக்னேஷ் என்ற மகனும் ஆனந்த சொர்ண துர்கா எனும் மகளும் உள்ளனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia