சு. சண்முகசுந்தரம்
காவ்யா சண்முகசுந்தரம் (பிறப்பு: டிசம்பர் 30, 1949) என்பவர் தமிழ்ப் பேராசிரியர், நூல் வெளியீட்டாளர் மற்றும் தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கால்கரை எனும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.விருது: தமிழ்காவலர் விருது, தமிழ்ச்சுடர் விருது,கவிஞானி விருது, பாரதிதாசன் விருது,கவிமாமணி விருது,சங்ககவிமணி விருது ஆகும். கல்விஇவர் கால்கரை ஆரம்பப் பள்ளியிலும், வடக்கன்குளம் கன்கார்டியா உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தவர். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1977-ல் “திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புற பாடல்களில் சமுதாய அமைப்பு” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். தமிழ்ப் பணி
எழுத்துப் பணி
பதிப்பு பணிஇவர் காவ்யா பதிப்பகம் எனும் பெயரில் நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். |
Portal di Ensiklopedia Dunia