ஜம்மு-காஷ்மீரின் இசை![]() ஜம்மு-காஷ்மீரின் இசை (Music of Jammu and Kashmir ) என்பது ஜம்மு-காஷ்மீரின் வளமான இசை பாரம்பரியத்தையும் கலாச்சார மரபுகளையும் பிரதிபலிக்கிறது. ஜம்மு-காஷ்மீரின் மூன்று வெவ்வேறு பகுதிகள், ஜம்மு பகுதி, காஷ்மீர் பகுதி மற்றும் லடாக் பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அவை அவற்றின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மரபுகளைக் கொண்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கின் இசை மத்திய ஆசிய இசையுடன் நெருக்கமாக உள்ளது. [1] ஜம்மு பிராந்தியத்திலிருந்து வரும் இசை வட இந்தியாவிலிருப்பது போன்றது. லடாக்கிய இசை திபெத்தின் இசையைப் போன்றது. [2] ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க சந்தூர் இசைக்கலைஞர்களில் ஜம்முவைச் சேர்ந்த சிவ்குமார் சர்மா, காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பஜன் சோபோரி ஆகியோர் அடங்குவர். சக்ரிஜம்மு-காஷ்மீரில் இசைக்கப்படும் பாரம்பரிய இசை வகைகளில் சக்ரி ஒன்றாகும். சக்ரி என்பது கருவிகளின் பாகங்களைக் கொண்ட ஒரு பதிலளிக்கும் பாடல் வடிவமாகும், மேலும் இது ஆர்மோனியம், ரூபாப், சாரங்கி, நௌட், கெஜர், டம்பக்னேர் மற்றும் சிம்தா போன்ற கருவிகளைக் கொண்டு இசைக்கப்படுகிறது . இது முஸ்லீம் மற்றும் இந்து காஷ்மீரிகளால் நாட்டுப்புற மற்றும் மதத் துறைகளில் நிகழ்த்தப்படுகிறது. விசித்திரக் கதைகள் அல்லது பிரபலமான காதல் கதைகளான யூசுப்-ஜுலைக்கா, லைலா-மஜ்னு போன்ற கதைகளைச் சொல்லவும் சக்ரி பயன்படுத்தப்பட்டது. சக்ரி முஸ்லிம் சமூகத்தில் தோன்றிய ஒரு நாட்டுப்புற நடனமான ரூஃபுடன் முடிவடைகிறது, ரூஃப் ஒரு நடன வடிவம் என்றாலும், சக்ரியின் சில முடிவான குறிப்புகள் வித்தியாசமாகவும் வேகமான குறிப்புகளிலும் விளையாடப்படுகின்றன. [3] இதில் திருமணங்களின் போது மருதாணி இரவு என்பது மிக முக்கியமான பகுதியாகும். ஹென்சாஹென்சா என்பது ஒரு பாரம்பரிய மற்றும் பண்டைய பாடலாகும். இது காஷ்மீரி பண்டிதர்களால் அவர்களின் திருவிழாக்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இது காஷ்மீரி நாட்டுப்புற பாடலின் பழமையான வடிவம் என்று பரிந்துரைக்கும் தொன்மையான அம்சங்களைக் கொண்டுள்ளது. [4] ரூஃப் அல்லது வான்வூன்ரூஃப் என்பது முஸ்லிம் சமூகத்தில் தோன்றிய ஒரு பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவமாகும். இது பொதுவாக திருமணம் மற்றும் பிற செயல்பாடுகள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் சில முக்கியமான சந்தர்ப்பங்களில் பெண்களால் நிகழ்த்தப்படுகிறது. [5] லதிஷாலதிஷா என்பது காஷ்மீர் இசை பாரம்பரியத்தின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். லதிஷா பாடுவதற்கான ஒரு கிண்டலான வடிவமாகும். இப்பாடல்கள் தற்போதைய சமூக மற்றும் அரசியல் நிலைமைகளுக்கு ஒத்ததாக பாடப்படுகின்றன. மேலும், முற்றிலும் நகைச்சுவையானவை. பாடகர்கள் அறுவடை காலத்தில் பொதுவாக நிகழ்ச்சிகளை ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு நகர்த்துகிறார்கள். கலாச்சார, சமூக அல்லது அரசியல் எதுவாக இருந்தாலும், அந்த கிராமம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தே பாடல்கள் இயற்றப்படுகின்றன. பாடல்கள் உண்மையை பிரதிபலிக்கின்றன. அது சில சமயங்களில் பாடலை ஜீரணிக்க சற்று கடினமாக்குகிறது. ஆனால் அவை முற்றிலும் பொழுதுபோக்கு அம்சத்தையே கொண்டிருக்கும். [6] [7] [8] சூபியானா கலாம் (காஷ்மீர் பாரம்பரியம்)சூபியானா கலாம் என்பது காஷ்மீரின் பாரம்பரிய இசையாகும். இது அதன் சொந்த ராகங்களை பயன்படுத்துகிறது. மேலும் சாந்தூர் என்று அழைக்கப்படும் நூறு சரங்களைக் கொண்ட கருவியுடன் காஷ்மீரி சாஸ், செட்டார், வசூல் மற்றும் கைம்முரசு இணை ஆகியவை உள்ளன. சோபியானா கலாமை அடிப்படையாகக் கொண்ட நடனம் ஹபீஸ் நக்மா என்பாதாகும் . [3] மேலும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia