காஷ்மீர் பள்ளத்தாக்கு
காஷ்மீர் பள்ளத்தாக்கு (Kashmir Valley), இந்தியா நாட்டின் வடக்கில் அமைந்த ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள காஷ்மீர் பிரதேசத்தில் உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்மேற்கில் பீர்பாஞ்சால் மலைத்தொடரும், வடகிழக்கில் இமயமலைத் தொடரும் உள்ளது. 135 கிலோ மீட்டர் நீளமும், 32 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்கை, ஜீலம் ஆறு வடிநிலமாகக் கொண்டது.[3] ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மூன்று கோட்டங்களில் காஷ்மீர் கோட்டமும் ஒன்றாகும். காஷ்மீர் கோட்டத்தில் அமைந்த காஷ்மீர் பள்ளத்தாக்கின் தெற்கில் ஜம்மு கோட்டமும், கிழக்கில் லடாக் கோட்டமும், மேற்கிலும், வடக்கிலும் எல்லைக் கட்டுப்பாடு கோடுகள் எல்லைகளாக உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு அனந்தநாக், பாரமுல்லா, பட்காம், பந்திபோரா, காந்தர்பால், குப்வாரா, குல்காம், புல்வாமா, சோபியான் மற்றும் ஸ்ரீநகர் என பத்து மாவட்டங்களைக் கொண்டது.[8] வரலாறு![]() குசான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், கிபி 500 முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை, காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்து மற்றும் பௌத்த சமய காபூல் சாகி மன்னர்கள் ஆண்டனர்.[9][10][11][12] கிபி ஏழாம் நூற்ற்றாண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் காசுமீர சைவம் வளர்ந்தது.[13] கி பி 625 முதல் 885 முடிய கார்கோட வம்சத்தினர் 625 முதல் 885 முடிய இப்பள்ளத்தாக்கின் பகுதிகளை ஆண்டனர்.[14][15] கி பி 855இல் கார்கோடப் பேரரசை வீழ்த்தி, அவந்தி வர்மன் காஷ்மீரில் உத்பால அரசை நிறுவினார்[16][17] லெகரா வம்சத்தினர் காஷ்மீர் பள்ளத்தாக்கை கிபி 1003 முதல் 1320 முடிய ஆண்டனர்.[18] இறுதியாக சுகதேவன் என்பவர் காலத்தில், தில்லி சுல்தான்களால் காஷ்மீரம் வெல்லப்பட்டு, 1320இல் தில்லிசுல்தானகத்தில் இணைக்கப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பின்னர் முகலாயர்களின் கீழ் 1526 முதல் 1751 முடிய இருந்தது. இந்தியாவில் கம்பெனி ஆட்சியின் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு, சீக்கியப் பேரரசின் கீழ் 1799 முதல் 1849 முடிய இருந்தது.[19] இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போருக்குப் பின்னர் சீக்கியப் பேரரசு வீழ்ச்சி அடைந்தது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு, 1846ல் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் கீழ் வந்தது. இந்தியப் பிரிவினையின் போது, பாகிஸ்தான், காஷ்மீர் பள்ளத்தாக்கை 1947ல் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க நடைபெற்ற 1947 இந்திய பாகிஸ்தான் போரில், வடக்கு நிலங்கள் மற்றும் ஆசாத் காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்தது.[20] பெரும்பாலான காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகள், ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. 1952இல் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகள் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. மக்கள்தொகை பரம்பல்![]() காஷ்மீர் பள்ளத்தாகில் பெரும்பான்மையின இனக்குழு, காஷ்மீரி மொழி பேசும் இசுலாமிய காஷ்மீர மக்கள் ஆவார். மேலும் காஷ்மீர பண்டிதர்கள், குர்சார்கள் மற்றும் பகாரி மொழி பேசும் பகாரிகள் சிறுபான்மையின மக்களாக உள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இசுலாமிய பிரிவினைவாதிகள் நடத்திய கலவரங்களால் 95% காஷ்மீர பண்டிதர்கள், பள்ளத்தாக்கை விட்டு, ஜம்மு, தில்லி, சண்டிகர் போன்ற பகுதிகளில் உள்நாட்டு அகதிகளாக வாழ்கின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இசுலாமியர் 97.16%, இந்துக்கள் 1.84%, சீக்கியர்கள் 0.88%, பௌத்தர்கள் 0.11% ஆகவுள்ளனர்.[5] இப்பள்ளத்தாக்கில் காஷ்மீர மொழி, உருது மொழி மற்றும் ஆங்கில மொழிகள் அதிகம் பயிலப்படுகிறது. உருது அலுவல் மொழியாக உள்ளது.[21] மாவட்டங்கள்காஷ்மீர் பள்ளத்தாக்கில் பத்து மாவட்டங்கள் உள்ளது:
அரசியல்காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதன்மை அரசியல் கட்சிகள் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சிகளாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீநகர் நகரம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்காலத் தலைநகரம் ஸ்ரீநகர், குளிர்காலாத் தலைநகரம் ஜம்மு ஆகும். தட்பவெப்பம்
காஷ்மீர் பள்ளத்தாக்கின் வடக்கில் காரகோரம் மலைத்தொடர்களும்; தெற்கிலும், மேற்கிலும் பிர் பாஞ்சல் மலைத்தொடர்களும், கிழக்கில் ஜன்ஸ்கர் மலைத்தொடர்களும் அமைந்துள்ளதால், இப்பகுதி ஆண்டு முழுவதும் இதமான குளிர்நிலை கொண்டுள்ளது.[23] இப்பகுதி வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலங்களில் மிதமான வெப்பமும், குளிர்காலத்தில் பனியும் கொண்டது. சூலை மாதத்தில் அதிகபட்ச வெப்பம் 16 °C ஆகவும்; டிசம்பர் மற்றும் சனவரி மாதங்களில் குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பம் −15 °C ஆகவுள்ளது. பனிக்காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மலைகளும், மலையடிவாரப் பகுதிகளும் பனியால் மூடப்பட்டிருக்கும்.
சுற்றுலாஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புகழ்பெற்ற பல ஆன்மிகத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் மலைவாழிடங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளது. அவைகளில் சில: 1. குல்மார்க், 2. தால் ஏரி, 3. பகல்கம், 4. அமர்நாத் குகைக் கோயில், 5. சிவகோரி, 6. மார்தாண்ட சூரியன் கோயில் மற்றும் 6. ஸ்ரீநகர் சாலிமார் தோட்டம், 7 சோன்மார்க், 8. லித்தர் பள்ளத்தாக்கு முதலியன ஆகும்.
போக்குவரத்துகாஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளுடன் தேசிய நெடுஞ்சாலை எண் 1 எ மற்றும் தேசிய நெடுஞ்சாலை 1பியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளத்தாக்கின் ஸ்ரீநகர் வானூர்தி நிலையம், ஜம்மு, லே, தில்லி, மும்பை மற்றும் சண்டிகருடன் இணைக்கிறது. 2009ல் துவக்கப்பட்ட, 119 கி.மீ. நீளமுள்ள ஜம்மு - பாரமுல்லா இருப்புப் பாதை, பள்ளத்தாக்கின் மேற்கு பகுதிகளுடன் இணைக்கிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia