ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு

33°13′N 103°55′E / 33.217°N 103.917°E / 33.217; 103.917

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி.
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
பர்ள் அருவி (Pearl Waterfall) ஜியுசாய்கோவிலுள்ள பல பலமட்டங்களில் அமைந்த அருவிகளில் ஒன்றாகும்.
வகைஇயற்கை
ஒப்பளவுvii
உசாத்துணை637
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1992 (16ஆவது தொடர்)
ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு 九寨沟
ஐயுசிஎன் வகை III (இயற்கை நினைவகம்)
Map showing the location of ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு 九寨沟
Map showing the location of ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு 九寨沟
அமைவிடம்சிச்சுவான், சீனா
அருகாமை நகரம்சோங்பான்
ஆள்கூறுகள்33°12′N 103°54′E / 33.200°N 103.900°E / 33.200; 103.900
பரப்பளவு600 to 720 கி.மீ.
நிறுவப்பட்டது1978
வருகையாளர்கள்1,190,000 (in 2002)
நிருவாக அமைப்புகட்டுமானத்துக்கான சிச்சுவான் மாகாண ஆணையம் (Sichuan Provincial Commission for Construction)

ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு இயற்கை காப்பகம் ஆகும். இது பல மட்டங்களில் அமைந்த அருவிகளுக்கும், பல நிறங்களிலான ஏரிகளுக்கும் பெயர் பெற்றது. 1992 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. காக்கப்பட்ட பகுதிகளுக்கான IUCN வகைப்பாட்டு முறைமையின்படி, இது வகை V (காக்கப்பட்ட நிலத்தோற்றம்) என்பதற்குள் அடங்கும்.[1][2][3]

புவியியலும் காலநிலையும்

ஜியுசாய்கோ மின்ஷான் மலைத் தொடரின் தென் முனையில் மாகாணத் தலைநகரான செங்டுவுக்கு வடக்கே 330 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் நான்பிங் கவுண்டி என அழைக்கப்பட்ட ஜியுசாய்கோ கவுண்டியின் ஒரு பகுதியாகும். இவ்விடம் சிச்சுவான் மாகாணத்தில், அதன் கான்சு மாகாணத்துடனான எல்லைக்கு அருகிலுள்ள ஆபா திபேத்திய கியாங் தன்னாட்சி அதிகாரஎல்லைப் பகுதிக்கு உட்பட்டது.

இப்பள்ளத்தாக்கு குறைந்தது 240 சதுர கிலோமீட்டர் பரப்பளவைத் தன்னுள் அடக்கியுள்ளது. சில காப்பு நிறுவனங்கள், 400 - 600 சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட இடைநிலைப் பகுதிகளையும் உள்ளடக்கி, இதனை 600 - 700 சதுர கி.மீ. என்கின்றன. இப்பகுதியின் உயரம் ஷுசெங் நீர்வெளியேற்றப் பகுதிக்கு அண்மையில் 1,998 - 2,140 மீட்டர்கள் தொடக்கம் கான்சிகொங்காய் மலையில் உள்ள செச்சாவா நீர்வெளியேற்றப் பகுதியில் 4,558 - 4,764 மீட்டர்கள் வரை வேறுபடுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Huadong, Guo (2013), Huadong, Guo (ed.), "Jiuzhaigou Valley Scenic and Historic Interest Area", Atlas of Remote Sensing for World Heritage: China (in ஆங்கிலம்), Berlin, Heidelberg: Springer, pp. 272–281, doi:10.1007/978-3-642-32823-7_38, ISBN 978-3-642-32823-7, retrieved 2024-03-28
  2. "Jiuzhaigou Valley Scenic and Historic Interest Area". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). Retrieved 2017-08-16.
  3. "Forest Change Over Millennia", The World Atlas of Trees and Forests, Princeton University Press, pp. 304–331, 2022-09-20, retrieved 2024-03-28
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya