ஜெகந்நாத் பகாடியா
ஜெகந்நாத் பகாடியா (15 சனவரி 1932-19 மே 2021) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவரும் ஆவார். இவர் இராசத்தானின் முன்னாள் முதலமைச்சராகவும், அரியானாவின் ஆளுநராகவும், பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார். இவர் 19 மே 2021 அன்று கோவிட்-19 பெருந்தொற்றால் இறந்தார்.[1][2] இளமையும் கல்வியும்பகாடியா இராசத்தான் மாநிலத்தின் இன்றைய பரத்பூர் மாவட்டத்தின் புசாவர் நகரில் ஒரு தலித் குடும்பத்தில் 1932 சனவரி 15 அன்று நதீலால் பகாடியா மற்றும் சந்தா தேவிக்கு மகனாகப் பிறந்தார்.[3][4] முதுகலை மற்றும் இளநிலைச் சட்டப் படிப்பினை முறையே எம். எஸ். ஜே. கல்லூரி, பரத்பூர், மகாராஜா கல்லூரி, ஜெய்ப்பூர் மற்றும் இராசத்தான் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரிகளில் முடித்துள்ளார்.[5] இவர் அம்பேத்காரைப் பின்பற்றுபவர் ஆவார்.[6] அரசியல்இராசத்தான் முதல்வராக1980 சூன் 6 முதல் 1981 சூலை 14 வரை இராசத்தான் மாநில முதலமைச்சராக இருந்தார். இராசத்தான் மாநில முதல்வராகப் பதவி வகித்த முதல் தலித் ஆவார்.[4][1] பகாடியா 1998 முதல் 2008 வரை மற்றும் 1980 முதல் 1990 வரை இராசத்தான் சட்டமன்றத்தில் உறுப்பினராகப் பணியாற்றினார்.[7] மக்களவை உறுப்பினராகபகாடியா 2ஆவது மக்களவையில் சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி மற்றும் 4ஆவது, 5ஆவது மற்றும் 7ஆவது மக்களவைகளில் இராசத்தானின் பயானா மக்களவைத் தொகுதியிலிருந்து உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[8] இவரது மனைவி சாந்தி பகாடியா மக்களவை உறுப்பினராக இருந்தார். ஆளுநராகபகாடியா 3 மார்ச் 1989 முதல் 2 பிப்ரவரி 1990 வரை பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார்.[9] பின்னர், இவர் சூலை 27,2009 முதல் சூலை 26,2014 வரை அரியானா ஆளுநராகப் பணியாற்றினார்.[10] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia