காப்தன் சிங் சோலங்கி
காப்தன் சிங் சோலங்கி (Kaptan Singh Solanki)(பிறப்பு: ஜூலை 1, 1939) என்பவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திரிபுராவின் 17வது ஆளுநர் ஆவார். ஆகஸ்ட் 2009 முதல் மே 2014 வரை, மாநிலங்களவையில் மத்தியப் பிரதேச மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். கல்விசோலங்கி, உஜ்ஜைனியில் உள்ள விக்ரம் பல்கலைக்கழகம், பி. ஜி. பி. டி. கல்லூரி மற்றும் குவாலியரின் சிவாஜி பல்கலைக்கழகத்தின் மகாராணி இலக்குமிபாய் கல்லூரி ஆகியவற்றில் படித்தார். ஆசிரியராகசோலங்கி, 1958 முதல் 1965 வரை முரைனா மாவட்டத்தின் பான்மோரில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1966 முதல் 1999 வரை குவாலியரில் உள்ள பி. ஜி. பி. கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர்சோலங்கி இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக, ஆகஸ்ட் 2009 முதல் 2014 வரை இரு முறை பணியாற்றியுள்ளார். ஆளுஞராகஅரியானா ஆளுஞர் ஜகநாத் பகாடியாவின் பதவிக்காலம் 26 ஜூலை 2014இல் முடிவடைந்ததை அடுத்து அரியானாவின் ஆளுநராக சோலங்கி நியமிக்கப்பட்டார்.[1] அரியானா ஆளுஞர் பதவியினையடுத்து திரிபுராவின் ஆளுஞராக 25 ஆகஸ்ட் 2018 முதல் 28 ஜூலை 2019 வரை பணியாற்றினர். குடும்ப வாழ்க்கைஇவர் 1959ஆம் ஆண்டு ஸ்ரீமதி ராணி சோலங்கியினை மணந்துகொண்டார். இவர்களுக்கு, இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.[2] வகித்தப் பதவிகள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia