டக்கர் (Takkar (2023 film)) என்பது இந்திய தமிழ் மொழி காதல்அதிரடித் திரைப்படமாகும், இதனை கார்த்திக் ஜி. கிரிஷ் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.[1] இப்படத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கௌசிக் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், அபிமன்யு சிங், முனிஷ்காந்த் மற்றும் விக்னேஷ்காந்த் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2]
இத்திரைப்படம் 9 சூன் 2023 அன்று வெளியிடப்பட்டது.[3]
கதை சுருக்கம்
குணசேகர் ஒரு மகிழ்ச்சியான இளைஞன், அவன் கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறான், அவன் ஒரு சூழ்நிலையில் பணக்கார பெண்ணிடம் சிக்கிக்கொள்கிறான், அதன் பின் அந்த பணமே துன்பத்திற்கு மூல காரணம் என்று நம்புகிறான். சாலைப் பயணத்தில் பயணம் செய்யும் போது, இருவரும் மாந்தக் கடத்துகை வலையில் சிக்கிக் கொள்கிறார்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்கின்றன.
இத்திரைப்படத்தை இயக்கியவர் கார்த்திக் ஜி. கிரிஷ், இவர் இதற்கு முன்னர் 2014யில் கப்பல் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.[4] இத்திரைப்படம் பேஷன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவை வாஞ்சிநாதன் முருகேசன், படத்தொகுப்பை ஜி.ஏ.கௌதம் செய்துள்ளார்.[5] இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிக்கிமில் நடைபெற்றது.[6] முதல் பார்வை சுவரொட்டி மற்றும் மோஷன் சுவரொட்டி ஆகியவை 23 டிசம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது.[7][8] படத்தின் விளம்பரம் சித்தார்த்தின் பிறந்த நாளான 17 ஏப்ரல் 2023 அன்று வெளியிடப்பட்டது.[9][10][11] படத்தின் முன்னோட்டம் 21 மே 2023 அன்று வெளியிடப்பட்டது.[12][13]
இசை
இத்திரைப்பபடத்திற்கு இசையமைத்தவர் நிவாஸ் கே.பிரசன்னா.[14] முதல் தனிப்பாடலான "ரெயின்போ திரலில்" 21 ஜனவரி 2020 அன்று வெளியிடப்பட்டது.[15] இரண்டாவது தனிப்பாடலான "மரகத மாலை" 31 ஜனவரி 2020 அன்று வெளியிடப்பட்டது.[16] மூன்றாவது தனிப்பாடலான "நிரா" 27 பிப்ரவரி 2020 அன்று வெளியிடப்பட்டது மற்றும் நல்ல வரவேற்பைப் பெற்றது.[17][18] மில்லி வலைப்பதிவில் இருந்து எழுத்தாளர் ஒருவர், "கவனிக்க மற்றும் விரும்புவதற்கு நிறைய இருக்கிறது, இங்கே: சித் ஸ்ரீராமின் முன்னணி குரல், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மாளவி சுந்தரேசனின் பாடலின் பிற்பகுதி!" என்று எழுதினார்.[19] மேலும் பிஹைண்ட்வுட்ஸ் வலைப்பதிவைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர், "சித் ஸ்ரீராம் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறார், அவர் பாடும்போது, ஒரு விடயம் மிகவும் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக உள்ளது." என்று எழுதினார்.[20]
இத்திரைப்படம் 17 ஏப்ரல் 2020 அன்று வெளியிடப்படும் என்று படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது, ஆனால் கோவிட்-19 தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டு [21] பின்னர் 9 ஜூன் 2023 அன்று வெளியிடப்பட்டது.[22][23]