டாயாங் புந்திங் ஏரி
டாயாங் புந்திங் ஏரி (மலாய்: Tasik Dayang Bunting; ஆங்கிலம்: Dayang Bunting Lake அல்லது Lake of the Pregnant Maiden); என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், லங்காவி தீவில் உள்ள ஒரு நன்னீர் ஏரியாகும். இந்த ஏரி சிறிய ஏரியாக இருந்தாலும் மலேசிய வரலாற்றில் பிரபலமானது. டாயாங் புந்திங் ஏரி அமைந்து இருக்கும் காடுகள், மலேசியாவில் உள்ள மூன்று தனித்துவமான புவிக் காடுகளில் (Geoforest Park) ஒன்றாகும். இந்தக் காடுகள் 4,354 ஹேக்டர் பரப்பளவைக் கொண்டது.[1] பொதுஇந்த நன்னீர் ஏரி மலேசியப் புராணக் கதைகளில் சொல்லப் படுகிறது. இந்த ஏரியின் நீரில் நீந்தினால் அல்லது இந்த ஏரியின் நீரைக் குடித்தால் பெண்களுக்கு கருவுறுதல் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.[2] லங்காவியில் உள்ள 99 தீவுகளில் டாயாங் புந்திங் தீவு இரண்டாவது பெரிய தீவு ஆகும். இது லங்காவி தீவின் தெற்கே அமைந்துள்ளது. படகின் மூலமாக எளிதாகச் செல்லலாம். புவி வனப் பூங்காஇந்த ஏரியைப் பற்றிய ஒரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் இந்த ஏரி கடலுக்கு மிக மிக அருகில் இருந்தாலும் இது ஒரு நன்னீர் ஏரியாகும். உப்பு நீரின் கலப்பு இல்லை. ஒரு சின்னக் குன்றுப் பாறைதான் இந்த ஏரியையும் கடலையும் பிரிக்கின்றது. இந்த ஏரி அழுத்தமான நீல நிற நீரைக் கொண்டுள்ளது. டாயாங் புந்திங் ஏரியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் புவி வனப் பூங்கா பகுதியாகும். பூங்காவில் பல குகைகள் உள்ளன. உண்மையில் இந்த ஏரியானது ஒரு பெரிய குகை இடிந்து விழுந்ததால் உருவான ஏரியாகும்.[3] காட்சியகம்மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia