தைப்பிங் ஏரித் தோட்டம்
தைப்பிங் ஏரித் தோட்டம் (ஆங்கிலம்: Taiping Lake Gardens; மலாய்: Taman Tasik Taiping;) என்பது பிரித்தானியர் ஆட்சியின் போது மலேசியாவில் உருவாக்கப்பட்ட முதல் பொதுத் தோட்டமாகும். இந்தத் தோட்டமானது மெக்சுவல் மலை அருகே அமைந்துள்ளது. 1880-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஏரித் தோட்டம், மலேசியாவிலேயே மிகப் பழமையான ஏரித் தோட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது.[1] இந்த ஏரித் தோட்டம், தைப்பிங் நகர மையத்திற்கும் தைப்பிங் விலங்கு சரணாலயத்துக்கும் (Taiping Zoo) அருகில் அமைந்துள்ளது. இந்த இடம் பினாங்கு விமானத் தளத்தில் இருந்து 90 நிமிட பயண நேரத்தில் அமைந்திருக்கிறது. தைப்பிங் தோட்டப் பகுதி, வாரத்தில் 2 நாட்கள் மழை கொட்டும் பகுதியாகும். இந்தப் பகுதி எங்கும் ஏரிகளும் புல்வெளிகளும் நிறைந்து காணப்படுகின்றன.[2] வரலாறுதைப்பிங் ஏரித் தோட்டம் 1880-ஆம் ஆண்டில் ஒரு பொதுத் தோட்டமாக நிறுவப் படுவதற்கு முன்பு முதலில் அது ஒரு சுரங்கத் தளமாக இருந்தது. கர்னல் ராபர்ட் சாண்டிலேண்ட்ஸ் பிரோட் வாக்கர் (Colonel Robert Sandilands Frowd Walker) என்பவரின் சிந்தனையில் உருவானதுதான் தைப்பிங் ஏரித் தோட்டம்.[3] கர்னல் ராபர்ட் பிரோட் வாக்கர், 1880-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநிலத்தில் ஆயுதமேந்திய காவல் துறையினருக்குத் தலைவராக இருந்தவர் (Perak Armed Police). பேராக் ஈயச் சுரங்கங்களில் நடைபெற்று வந்த சீனர் கோஷ்டி பூசல்களை அடக்குவதில் வெற்றி கண்டவர்.[4][5] பொழுதுபோக்கு பூங்காகைவிடப்பட்ட ஓர் ஈயச் சுரங்கத்தின் நிலம், சுங் கெங் கியூ (Chung Keng Quee) என்பவரால், பொது மக்களின் பயன்பாட்டிற்கான ஒரு பொழுதுபோக்கு பூங்காவாக வழங்கப்பட்டது. 1884-ஆம் ஆண்டில் தைப்பிங் ஏரித் தோட்டத்தில் புல், பூ மரங்கள் நடப்பட்டன; தோட்டத்தின் ஒரு பகுதியில் மாடுகளைத் தவிர்ப்பதற்காக வேலிகள் அமைக்கப்பட்டன.[6] இந்தப் பூங்கா திறக்கப் பட்டதில் இருந்து இன்று வரையில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏரிகளும் குளங்களும்![]()
சுற்றுலா இடங்கள்
மலைப் பகுதியில் விடுதி வசதிகள் உள்ளன. முன்பதிவு வசதி இல்லை பார்வையாளர்கள் முன்னதாகவே (காலை 8 மணிக்கு) சென்று நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும். பார்வையாளர்கள் மேலே செல்ல விரும்பும் நேரத்தையும் கீழே இறங்கும் நேரத்தையும் குறிப்பிடவேண்டும். ஒரு நபர் சுற்றிவர கட்டணச் செலவு ரிங்கிட் RM 4.00 (US $ 1.40) ஆகும். சராசரியாக நடந்து செல்ல 3 - 4 மணிநேரம் ஆகும்; ஜீப் பயணத்தில் 25 நிமிடங்கள் ஆகும்.
துலிப் பண்ணையில் நுழைவுக் கட்டணமானது பருவ காலம் அல்லாத காலத்தில் ரிங்கிட் RM 1. (அமெரிக்க டாலர் $ 0.35) மற்றும் பருவகாலத்தில் RM2 (US $ 0.70) ஆகும்.
காட்சியகம்தைப்பிங் ஏரித் தோட்டத்தின் அழகிய இயற்கைக் காட்சிகள் மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia