பாலிங்
பாலிங் (மலாய்: Baling; ஆங்கிலம்: Baling; சீனம்: 华玲县) என்பது மலேசியா, கெடா, பாலிங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். தாய்லாந்து நாட்டின் தெற்கே இருக்கும் பெத்தோங் நகருக்கு மிக அருகில் இந்தப் பாலிங் நகரம் அமைந்து உள்ளது. சுங்கை பட்டாணி நகரில் இருந்து 56 கி.மீ. வடக்கே உள்ளது. கெடா மாநிலத்தில் 12 மாவட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தின் பெயர் பாலிங் மாவட்டம். அந்த மாவட்டத்தில் தான் பாலிங் நகரம் அமைந்து உள்ளது. பொதுமலேசிய வரலாற்றில் சிறப்பு பெற்ற நகரங்களில் பாலிங் நகரமும் ஒன்றாகும். 1948 ஆம் ஆண்டில் இருந்து 1960 ஆம் ஆண்டு வரை, மலாயா கம்னியூஸ்டுப் போராளிகளுக்கு எதிராகப் பாலிங் மாவட்டத்தில் அவசரகாலப் பிரகடனம் செய்யப் பட்டது. மலாயா வரலாற்றில் புகழ்பெற்ற பாலிங் பேச்சுவார்த்தை இங்குதான் நடைபெற்றது. மலாயா கம்னியூஸ்டு கட்சிக்கும் மலாயா அரசாங்கத்திற்கும் இடையே அந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.[1] பாலிங் பேச்சுபாலிங் பேச்சு அல்லது பாலிங் பேச்சுவார்த்தை (மலாய்: Rundingan Damai Baling; ஆங்கிலம்: Baling Talks) எனும் பேச்சுவார்த்தை பாலிங் நகரத்தில், 1955 டிசம்பர் மாதம் 28 - 29-ஆம் தேதிகளில், மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்கும் (Communist Party of Malaya - CPM); மலாயா அரசாங்கத்திற்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையாகும். பாலிங் அரசாங்க ஆங்கிலப் பள்ளியில் (Government English School) நடைபெற்றது.[2] மலாயா அவசரகால நிலைமையைத் தீர்க்கும் முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் மலாயா அரசாங்கத்தைப் பிரதிநிதித்து துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman), டத்தோ சர் டான் செங் லோக் (Dato Sir Tan Cheng Lock), சிங்கப்பூர் முதலமைச்சர் டேவிட் மார்சல் (David Marshall) ஆகியோர் கலந்து கொண்டனர்.[3][4] மலாயா கம்யூனிஸ்டு கட்சிமலாயா கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சின் பெங் (Chin Peng); அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் ரசீட் மைடின்; மத்திய பிரசார அமைப்பின் தலைவர் சென் தியென் கலந்து கொண்டனர்.[5] ஒரு சுமுகமான முடிவு காண்பதே அந்த பாலிங் பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்கு. ஆனால், சின் பெங் முன்வைத்தக் கோரிக்கைளை மலாயா அரசாங்கத் தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அதே சமயத்தில் சரணடைதல் விதிமுறைகளை மலாயா கம்யூனிஸ்டு கட்சியினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அதனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. காட்சியகம்
மேற்கோள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia