டார்ஜிலிங் மக்களவைத் தொகுதி (Darjeeling Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின்டார்ஜீலிங்கை மையமாகக் கொண்டுள்ளது. ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் டார்ஜிலிங் மாவட்டத்திலும், ஒரு சட்டமன்றத் தொகுதி கலிம்போங் மாவட்டத்திலும் ஒரு சட்டமன்றத் தொகுதி உத்தர தினஜ்பூர் மாவட்டத்திலும் உள்ளன.
சட்டமன்றத் தொகுதிகள்
மேற்கு வங்காளத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதியான டார்ஜிலிங் மக்களவைத் தொகுதி 2009 முதல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]