அதிகாரி (திரைப்படம்)
அதிகாரி (Adhikari) 1991இல் தமிழ் மொழியில் வெளிவந்த அதிரடித் திரைப்படம். இதை இயக்கியவர் பி. வாசு. இப்படத்தில் அருண் பாண்டியன், கௌதமி ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடிக்க உடன், ஆனந்த், கவுண்டமணி, செந்தில், சேது விநாயகம், ஸ்ரீவித்யா, அஞ்சு, ராக்கி, ராஜேஷ் குமார் ஆகியோரும் நடித்திருந்தனர். படத்தயாரிப்பு கே. கனகசபை, இசை கங்கை அமரன். இது 14 ஏப்ரல் 1991இல் வெளியிடப்பட்டது.[1][2] கதைச்சுருக்கம்துரைப்பாண்டி (அருண் பாண்டியன்) சிறையில் இருந்து தப்பித்து தங்கக்கடத்தல் செய்யும் வரதப்பனை (சேது விநாயகம்) பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறான். துரைப்பாண்டியை சிறையில் தாக்குவதற்கு வரதப்பன் பல வழிகளில் முயற்சித்த போதிலும், அவரது அடியாட்கள் ஒவ்வொரு முறையும் தோல்வியடைகின்றனர். ஒரு தொலைதூர கிராமத்தில் மறைந்து வாழும் துரைப்பாண்டிக்கு பொன்னி (கௌதமி உதவுகிறாள். அங்கு, துரைப்பாண்டி தனது முன்னாள் நண்பன் அன்புவைச் சந்திக்கிறான். துரைப்பாண்டியை கண்டு ஓடிவரும்போது கார் ஒன்று அவன் மீது மோதுவதால் அன்பு இறந்து போகின்றான். அன்பு , பொன்னியின் சகோதரன். அவனது இறுதி சடங்குக்குப் பின்னர், வரதப்பனைப் பழிவாங்குவதற்கான தனது காரணத்தை பொன்னியிடம் துரைப்பாண்டி கூறுகிறான். தனக்கும் வரதப்பனுக்கும் ஏன் பிரச்சனை ஏற்பட்டது, நேர்மையான காவல் அதிகாரியான தான் எவ்வாறு சிறை செல்ல நேர்ந்தது என்பது பற்றி பொன்னிக்கு விளக்கினான். பின்னர், துரைப்பாண்டி வரதப்பனை கொலை செய்ய அவனை பின்தொடர்கிறான். ஆனால் துரைப்பாண்டியை கைது செய்ய காவல்துறையினர் பின் தொடர்கிறார்கள். முடிவில் என்ன ஆனது என்பது கதையின் முக்கியத்துவத்தை உருவாக்குகிறது. நடிகர்கள்அருண் பாண்டியன் - துரை பாண்டியாக ஒலித்தொகுப்பு
இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைக்க 5 பாடல்களை வாலி (கவிஞர்) எழுத 1991இல் வெளியிடப்பட்டது.[3][4][5]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia