டொனால்டு மெக்லவரி
சர் டொனால்டு மெக்லவரி (மலாய்; ஆங்கிலம்: Sir Donald MacGillivray) (22 செப்டம்பர் 1906 - 24 டிசம்பர் 1966) என்பவர் மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையராகப் பணியாற்றிய கடைசி உயர் ஆணையர் ஆவார்.[1] மலாயாவின் விடுதலை குறித்து மலாய்க்காரர்களுடன் வெளிப்படையாக விவாதித்த ஒரே உயர்மட்ட பிரித்தானிய அதிகாரி டொனால்டு மெக்லவரி மட்டுமே ஆவார். அவர் 1954 முதல் 1957 வரை மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையராகப் பணியாற்றினார். பொதுஅவர் 1929-இல், ஐக்கிய இராச்சியத்தின் காலனிய நிர்வாக சேவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு; 1929-ஆம் ஆண்டு தங்கனீக்காவுக்கு அனுப்பப்பட்டார். 1932-இல் ஆக்சுபோர்டு டிரினிட்டி கல்லூரியில் எம்.ஏ. உயர்நிலைப் பட்டம் பெற்றார். 1936-ஆம் ஆண்டில் லூயிசா மாய் நாக்ஸ் பிரவுன் என்பவரை மணந்தார்.[2] 1938-ஆம் ஆண்டில், இலண்டன் தலைமை அலுவலகம், அவரை பாலஸ்தீன நாட்டிற்கு அனுப்பியது, ஐக்கிய இராச்சியத்தின் காலனிய நிர்வாகக் கொள்கையின்படி பிரச்சினைக்குரிய பிரதேசங்களில் அதன் சிறந்த நிர்வாகிகளைப் பணியமர்த்துவது வழக்கமாகும். பின்னர், அவர் 1947 முதல் 1952 வரை ஜமைக்காவில் காலனியச் செயலாளராகப் பணியாற்றினார். மேலும் அவர் அந்த நாட்டின் ஆளுநர் பதவிக்கான வரிசையில் இருந்தார். ஜமைக்காவின் அடுத்த ஆளுநர் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மலாயா அவசரகாலம்ஆனாலும் அவர் மலாயாவுக்கு அனுப்பப்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில் மலாயாவில் அவசர கால நிலை நிலவியது. அப்போது மலாயாவில் மலாயாவின் உயர் ஆணையராக இருந்த சர் ஜெரால்டு டெம்பளருக்கு துணை உயர் ஆணையராகப் பணியாற்ற டொனால்டு மெக்லவரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] ஜெரால்ட் டெம்பிளர் மலாயாவுக்கு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான், 1951-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி, மலாயா பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த பொதுவுடைமை கிளர்ச்சியாளர்களின் பதுங்கு தாக்குதலில் என்றி கர்னி எனும் உயர் ஆணையர் கொல்லப்பட்டார். அதனால் மலாயா நாட்டு மக்களின் மன உறுதியும் குறைவாக இருந்தது.[2] உள்நாட்டு அரசியல் தலைவர்கள்டொனால்டு மெக்லவரி மலாயாவிற்கு வந்தது, உள்நாட்டு அரசியல் தலைவர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. மலாயாவின் உயர் ஆணையருக்கு துணையாக ஒருவர் வந்தால், அவர் ஓர் உள்நாட்டுக் குடிமகனாக இருக்க வேண்டும் என்பதே உள்நாட்டுத் தலைவர்களின் விருப்பமாக இருந்தது. எனினும், சில மாதங்களுக்குள் டொனால்டு மெக்லவரி உள்நாட்டுத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு; உள்நாட்டு அரசியல் அரங்கில் மதிப்புமிக்கவராகவும் மாற்றம் கண்டார். மற்றும் 1954-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஜெரால்ட் டெம்பிளர் உயர் ஆணையர் பதவியை விட்டு வெளியேறியபோது, அவருக்குப் பதிலாக டொனால்டு மெக்லவரி மலாயாவின் உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர் மலாயாவுக்கு விடுதலை கிடைப்பதற்கு ஒரு முன்னோடியாகவும் இருந்தார்.[2][3] மலாயாவின் விடுதலைமலாயாவின் விடுதலை குறித்து மலாய்க்காரர்களுடன் வெளிப்படையாக விவாதித்த ஒரே பிரித்தானிய அதிகாரி டொனால்டு மெக்லவரி மட்டுமே ஆவார். அவர் 1954 முதல் 1957 வரை மலாயாவின் உயர் ஆணையராகப் பணியாற்றினார். 1957 ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதி மலாயாவிற்கு விடுதலை கிடைத்தது.[4] மலாயாவின் விடுதலையைக் கொண்டாடிய பிறகு, மலேசிய அரசர் மற்றும் அவரின் துணைவியார், மலாயாவின் முதல் மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் ஆகியோர், சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம் வரையில் வந்து டொனால்டு மெக்லவரியை வழி அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் 1960-ஆம் ஆண்டில், சிம்பாப்வே நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் அங்கு சேவை செய்தார். நீண்ட கால நோய்க்குப் பிறகு, 24 டிசம்பர் 1966 அன்று நைரோபி மருத்துவமனையில் காலமானார்.[1][2] விருதுகள்
மேலும் காண்கமேற்கோள்கள்
படைப்புகள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia