மலேசிய விடுதலை நாள்
மலேசிய விடுதலை நாள் (மலாய்: Hari Merdeka; அல்லது Hari Kebangsaan Malaysia ஆங்கிலம்: Malaysia Independence Day) என்பது 1957-ஆம் ஆண்டு பிரித்தானிய குடிமைவாத ஆட்சியிடமிருந்து மலாயா கூட்டமைப்பு விடுதலை பெற்ற நாளாக 31 ஆகத்து அன்று கொண்டாடப்படுகிறது. இதில் மலேசிய நாள் (மலாய்: Hari Malaysia) என்பது வேறு; மலேசிய விடுதலை நாள் என்பது வேறு ஆகும்.[1][2] 1963 செப்டம்பர் 16-ஆம் தேதி, மலாயா கூட்டமைப்பு, சரவாக், வடக்கு போர்னியோ மற்றும் சிங்கப்பூர் ஆகிய பகுதிகள் ஒன்றிணைந்து மலேசியா எனும் நாடாக உருவான நாள்; மலேசியா நாள் என்று கொண்டாடப்படுகிறது.[3] விடுதலைக்கான பின்னணிபிரித்தானியர்களுடன் விடுதலைக்கான பேச்சுவார்த்தைக்காக துங்கு அப்துல் ரகுமான் தலைமையில் அமைச்சர்கள், மலாயாவின் அரசியல் தலைவர்கள் மலாயன் சீன அசோசியேசன் தலைவர் துன் டத்தோ சர் டான் செங் லொக் மற்றும் மலேசிய இந்தியக் காங்கிரசின் தலைவர் துன் சம்பந்தன் ஆகியோர் இலண்டன் சென்றனர்.[4] மலாயா அவசர காலத்தில் கம்யூனிச அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததும், 8 பிப்ரவரி 1956ல் பிரித்தானிய அரசாட்சியிடமிருந்து விடுதலைக்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும் நிர்வாகக் காரணங்களால் 31 ஆகத்து 1957 என்று இறுதி முடிவானது. விடுதலை நாள் நிகழ்ச்சிக்காக மெர்டேக்கா சதுக்கம் கோலாலம்பூரில் புதிதாக உருவாக்கப்பட்டது.[5] [6] 31 ஆகத்து 195730 ஆகத்து 1957 இரவு கோலாலம்பூர் அரச சிலாங்கூர் மன்றம், விடுதலை சதுக்கத்தில் பிரித்தானியர் ஆட்சியை ஒப்படைக்கும் நிகழ்வைக் காண ஏராளமானோர் குழுமினர். பிரதமராக பதவி ஏற்க இருந்த துங்கு அப்துல் ரகுமான் 11:58 பின்னேரத்தில் வந்தார். அவருடன் மலேசிய கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.[7] இரண்டு நிமிடம் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டு யூனியன் கொடி கீழே இறக்கப்பட்டது. மலேசியாவின் புதியகொடி ஏற்றப்பட்டு மலேசிய நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. மலேசிய நாட்டுப்பண் இசைக்கப்பட்ட பின்னர், ஏழு முறை மெர்டேக்கா என்று பொதுமக்கள் குரல் எழுப்பினர். பின்னர் துங்கு அப்துல் ரகுமான் பேசும்போது "மலாயன் மக்களின் வாழ்வில் சிறப்பான தினம்" என்று வர்ணித்தார்.[8] 31 ஆகத்து 1957 காலை கொண்டாட்ட நிகழ்வுகள் இதற்காகவே அமைக்கப்பட்ட மெர்டேக்கா மைதானத்தில் நடத்தப்பட்டது. காலை 9:30க்கு துவங்கிய அந்தக் கொண்டாட்டத்தில் 20,000க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மலாய் மாநில ஆட்சியாளர்கள், வெளிநாட்டு தூதர்கள், கூட்டரசின் அமைச்சர்கள், மற்றும் குடிமக்கள் கலந்து கொண்டனர்.[9] பங்கேற்றவர்கள்இந்நிகழ்வில் பங்கேற்ற வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் விவரம்:
அரசுத் தலைவர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia