தஞ்சை நாயக்கர்கள்
தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்தனர்.தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள். இவ்வம்சத்தின் முதல் மன்னன் சேவப்ப நாயக்கர் என்பவராவர். சேவப்ப நாயக்கர், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் அமர நாயக்கராகவும் இருந்த திம்மப்ப நாயக்கரின் மகன். தஞ்சாவூர் நாயக்கர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை பேசினர். [1] தஞ்சை நாயக்க அரசர்கள்
கோவிந்த தீட்சிதர்சோழ மண்டல வரலாற்றில் இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன் எனும் முப்பெரும் சோழ மன்னர்களுக்குக் கிருஷ்ணன் இர்மன் என்னும் மும்முடிச் சோழப் பிரம்மராயன் எப்படித் தளபதியோ, விக்கிரமசோழன், குலோத்துங்கன், இராஜராஜன் ஆகிய மூவேந்தர்களுக்கு ஒட்டக்கூத்தர் எப்படி அவைக்களப் புலவரோ, அதுபோன்று அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் எனும் மூன்று தஞ்சை மன்னர்களுக்கும் மதியமைச்சராக, அறிவுசார்ந்த ஆசிரியராக, பெரும்புலவராகத் திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர் ஆவார். [2] மேற்கோள்கள்
இவற்றையும் காண்கவெளி இணைப்பு
|
Portal di Ensiklopedia Dunia