சேர, சோழ, பாண்டியர் தமிழ்நாட்டைச் சங்ககாலத்தில் ஆண்டு வந்த அரசர்கள் ஆவர். இவர்களை மூவேந்தர் என வழங்குகிறோம். இவர்கள் ஆண்ட நிலப்பகுதியை முறையே சேரநாடு, சோழநாடு, பாண்டிய-நாடு [1] எனக் குறிப்பிடுகிறோம். இவற்றை இருப்பிடம் நோக்கிக் குடபுலம், குணபுலம், தென்புலம் எனச் சங்ககாலத்திலேயே வழங்கிவந்தனர்.
புறநானூறு என்னும் நூல்தொகுப்பில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட பாண்டிய அரசர்களின் பெயர்கள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ள. இவர்களது பெயருக்கு முன்னால் 'பாண்டியன்' என்னும் அடைமொழி உள்ளது. ஒப்புநோக்க எளிமைக்காக இந்த அடைமொழியை விடுத்து இங்குப் பெயர்களைத் தொகுத்துள்ளோம். பகுத்தறிய உதவும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதிப்பெயர் முதனமைக்குறிப்பு செய்யப்பட்டு அகரவரிசையில் பெயர்கள் அடுக்கப்பட்டுள்ளன.
இந்த அரசர்கள் இன்னின்ன புறநானூற்றுப் பாடல்களில் போற்றப்பட்டுள்ளனர் என்னும் குறிப்பு அந்தந்த அரசர்களின் பெயருக்குப் பக்கத்தில் தரப்பட்டுள்ளன.
மூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் [26][27] பத்துப்பாட்டையும் தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் [28] தொகுத்துப் பதிகம் பாடியவரும் குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன. அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில் தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும்.
↑உ. வே. சாமியாதையர் ஆராய்ச்சி குறிப்புடன் ((முதல் பதிப்பு 1894) ஐந்தாம் பதிப்பு 1956). புறநானூறு மூலமும் உரையும். சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு. pp. முன்னுரை, பாடப்பட்டோர் வரலாறு பக்கம் 62 முதல் 82. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
↑சு. வையாபுரிப் பிள்ளை அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கியது ((முதல் பதிப்பு 1940) இரண்டாம் பதிப்பு 1967). சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்). சென்னை - 1: பாரி நிலையம்,. pp. அரசர் முதலியோரும், அவர்களைப் பாடியோரும், பக்கம் 1461 முதலை 1485. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: location (link) CS1 maint: year (link)
↑உ. வே. சாமியாதையர் அரும்பத அகராதி முதலியவற்றுடன் (இரண்டாம் பதிப்பு 1920). பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும். சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, சுப்பிரமணிய தேசிகர் பொருளுதவி. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
Mahadevan, Iravatham (2003). Early Tamil epigraphy from the earliest times to the sixth century A.D. Harvard University Press.
Purushottam, Vi. Pi. (1989). Cankakala Mannar Kalanilai Varalaru.
Pillai, Sivaraja (1932, reprinted 1984). The Chronology of the Early Tamils. Asian Educational Services. {{cite book}}: Check date values in: |date= (help)
Kanakasabhai, V (1904). The Tamils Eighteen Hundred Years Ago. Asian Educational Services, New Delhi.
Subrahmanian, N (1972). History of Tamilnad. Koodal Publishers, Madurai.