தமிழ்ச்செல்வி என்பது சன் தொலைக்காட்சியில் 3 சூன் 2019 முதல் 31 மார்ச்சு 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் கொரோனாவைரசு காரணத்தால் 31 மார்ச்சு 2020 முதல் 247 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொடரை நடிகை மீனா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[1]
கதைசுச்ருக்கம்
தமிழ் செல்வி என்ற கிராமத்து பெண் படிப்பில் மீது அதிகம் ஆர்வம் கொண்டு கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்கின்றாள். ஆனால் இவளுக்கு அவளது முறை மாமனை திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் நிச்சயம் செய்கின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணத்தன்று அமுதன் என்பவரை திருமணம் செய்யும் செல்வி. இதனால் இரு குடும்பத்திற்கும் விரிசல் புகுந்த வீட்டில் இவளை ஏற்க மறுக்கும் புது உறவுகள் இவைகளை தாண்டி இவளது படிப்பில் இவள் எப்படி வெற்றி கொள்கிறாள் என்பது தான் கதை.
இந்த தொடர் முதலில் சந்திரகுமாரி என்ற தொடர் ஒளிபரப்பு நேரத்திற்கு பதிலாக 3 சூன் 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 5 ஆகஸ்ட் 2019 முதல் பிற்பகல் 1 மணிக்கு நேரம் மாற்றப்பட்டடு ஒளிபரப்பானது. கொரோனாவைரசு காரணத்தால் 31 மார்ச்சு 2020 முதல் 247 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.