சந்திரகுமாரி
சந்திரகுமாரி என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 10, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 18 மார்ச்சு 2019 முதல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு சரித்திர குடும்பத் நாடகத் தொடர் ஆகும். இந்தத் தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ராதிகாவின்ராடான் மீடியாவொர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அதிக பொருள் செலவில் தயாரிக்கிறது. இந்தத் தொடரில் சரித்திரகால பெண் மற்றும் தற்காலத்து பெண் என 2 வேடங்களில் ராதிகா நடித்தார், இவருக்கு பதிலாக விஜி சந்திரசேகர் சந்திரா என்ற காதாபாத்திரத்தில் நடித்தார். இவருடன் சேர்ந்து தாமிரபரணி, சட்டப்படி குற்றம் போன்ற படங்களில் நடித்த பானு, இதில் ராதிகாவின் மகளாக நடிக்கிறார். யுவராணி, அரவிந்து ஆகாசு, அருண் குமார், வேணு அரவிந்த், லதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.[1][2] சரித்திர காலத்துக் கதையை, அண்ணாமலை, வீரா, பாட்ஷா படத்தின் இயக்குநரான சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். நிகழ்காலக் கதையை சி.ஜே.பாஸ்கர் இயக்குகிறார். சிற்பி இசையமைக்கும் இந்தத் தொடருக்கு, பாலமுருகன் மற்றும் பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்தார். நடிகர்கள்முதன்மை காதாபாத்திரம்
துணை காதாபாத்திரம்
முன்னாள் காதாபாத்திரம்
ஒளிபரப்பு நேரம் மாற்றம்இந்த தொடர் முதலில் 10 திசம்பர் 2018 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பானது. 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில்லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பாகின்றது. 19 வருடங்கலாக இரவு 9:30 மணிக்கு ராதிகாவின் தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தது, இந்த தொடரின் மதிப்பிட்டு அளவு குறைவு காரணாமாக இந்த தொடர் நேரம் மாற்றப்பட்டது.
மதிப்பீடுகள்கீழே உள்ள அட்டவணையில், நீல நிற எண்கள் குறைந்த மதிப்பீடுகள் குறிக்கும் மற்றும் சிவப்பு நிற எண்கள் அதிக மதிப்பீடுகளை குறிக்கும்.
மொழி மாற்றம்இந்த தொடர் மலையாளம் மொழியில் சந்திரகுமாரி என்ற அதே பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 24, 2018 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:30 மணிக்கு சூர்யா தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகின்றது. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உதயா தொலைக்காட்சி மற்றும் ஜெமினி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia