தமிழ் நாட்டில் பாதுகாக்கப்பட்ட இடங்கள் ஏறத்தாழ 3,305 கிலோமீட்டர்களாகும். இது மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 2.54% ஆகும். மொத்த காடுகளின் பரப்பளவு 22,643 சதுர கிலோமீட்டர்களாகும். இது தமிழ்நாட்டின் பரப்பளவில் 15% ஆகும். இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் நில அளவை மாநில வாரியாக வரிசைபடுத்தினால் தமிழ் நாடு 14வது இடத்தில் உள்ளது.[2]
தமிழ் நாட்டில் முக்கியமான பாதுகாக்கப்பட்ட இடங்கள் பின்வருவன: 3 உயிர்கோள காப்பகங்கள், 5 தேசிய பூங்காகள், 8 வனஉயிரின உய்விடம், 4 யானை காப்பகங்கள், 5 புலிகள் காப்பகங்கள், 12 பறவைகள் காப்பகங்கள் ஆகும். இவ்வனைத்து பாதுகாக்கப்பட்ட இடங்களிலும் மிகவும் அழிவுறும் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கும் வனவிலங்கள் வாழ்கின்றன.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு வனத்துறை
காடு வளர- நாடு உயரும்
தமிழக மொத்த வனப் பரப்பளவு
22,877 ச.கி.மீ
காப்புக் காடுகள் பரப்பளவு
19,388 ச.கி.மீ
பாதுகாக்கப்பட்ட காடுகள் பரப்பளவு
2,183 ச.கி.மீ
வகைப்படுத்தா காடுகள் பரப்பளவு
1,386 ச.கி.மீ
தமிழகத்தின் மொத்த இந்திய வனப் பணி அலுவலர்கள்
140
வரலாறு
தென் இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட இடங்களை தேர்வு செய்வதும், பின் அதை காப்பதும் பிரித்தானியர்களின் வருகைக்கு பின்பே நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழ் நாட்டின் முதல்பாதுகாக்கப்பட்ட இடமாக முதுமலை வனவிலங்கு சரணாலயம் 1940ல் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் மொத்தம் காணப்படும் 17,672 வித்துமூடித் தாவர சிற்றினங்களில் 5640 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் காணப்படுகிறன, இது இந்தியாவின் மொத்த தாவரங்களில் 32 % சதவீதமாகும். தமிழகத்தில் 533 அகணிய (உள்ளெல்லைக்குரிய) தாவரங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.தமிழ் நாட்டில் 4 வித்துமூடியிலி தாவரங்களும் உண்டு. இந்தியாவில் உள்ள 1022 பன்னத்தாவர இனத்தில் தமிழ் நாட்டில் 184 சிற்றினங்கள் உள்ளன.[3]
விலங்குகள்
தமிழ் நாட்டில் காணப்படும் முக்கிய விலங்கினங்கள் பின்வருவன[4]:
மன்னார் வளைகுடா உயிரிக்கோளம் - உலக உயிரிக்கோளங்களில் ஒன்றாக, 1989 ஆம் ஆண்டு, இது 10,500 km2 (4,100 sq mi) பரப்பளவு கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இவ்வளைகுடா, இந்தியஇலங்கை நாடுகளின் கடற்கரைகளுக்கிடையே அமைந்துள்ளது.
நீலகிரி பல்லுயிர் வலயம் - இவ்வுயிரிக்கோளம் 5,520 km2 (2,130 sq mi) பரப்பளவை உடையதாக அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில் இது மூன்று இந்திய மாநில எல்லைகளுக்குள் அமைந்துள்ளதே ஆகும். இதன் மொத்த பரப்பளவில் 2,537.6 km2 (979.8 sq mi) பரப்பளவு தமிழ்நாட்டிலும், 1,527.4 km2 (589.7 sq mi) பரப்பளவு கருநாடகத்திலும், 1,455.4 km2 (561.9 sq mi) பரப்பளவு கேரளத்திலும் அமைந்துள்ளன.