தலக்காடு (கேரளம்)
தலக்காடு (Thalakkad) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின், மலப்புரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள ஊராகும். [1] மக்கள்தொகையியல்2001 இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, தலக்காட்டின் மொத்த மக்கள் தொகை 30577ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 14269 என்றும், பெண்களின் எண்ணிக்கை 16308 என்றும் உள்ளது.[1] KL-55 என்பது தலக்காடு ஊராட்சியின் ஆர்.டி.ஓ வாகனப் பதிவுக் குறியீடு ஆகும். தலக்காடு ஊராட்சியில் உள்ள முக்கிய இடங்கள்
தலக்காடு கிராம ஊராட்சி திரூர் நகரின் தெற்குப் பகுதியாக கருதப்படுகிறது. தலக்காடு வார்டுகள்தலக்காடு கிராம ஊராட்சி பின்வரும் 19 வார்டுகளை கொண்டுள்ளது: [2]
போக்குவரத்துதலக்காடு கிராமம் திரூர், குட்டிப்புரம் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 திரூர் வழியாக செல்கிறது. இச்சாலையின் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோவைக்கு செல்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் திரூரில் உள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia