தலைவி (திரைப்படம்)
தலைவி (Thalaivii) என்பது இந்திய நடிகையும், அரசியல்வாதியுமான ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2021இல் வெளியான வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாத்தும், ம. கோ. இ ராமச்சந்திரனாக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. மதன் கார்க்கி (தமிழ்), கே. வி. விஜயேந்திர பிரசாத் (தெலுங்கு), ரஜத் அரோரா (ஹிந்தி) ஆகியோரால் எழுதப்பட்ட இதை ஏ. எல். விஜய் இயக்கியுள்ளார். விப்ரி மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா அன்ட் என்டர்டெயின்மென்ட்டின் விஷ்ணு வர்தன் இந்தூரி , ஷைலேஷ் ஆர் சிங் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தில் மூன்று மொழிகளுக்கும் இசை, பின்னணி இசை, ஒலிப்பதிவு ஆகியவற்றை ஜி. வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டார். நடிகர்கள்
வெளியீடு24 பிப்ரவரி 2019 அன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளில் படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முதலில் தமிழில் 'தலைவி' என்றும், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் "ஜெயா" என்றும் பெயரிடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர்கள் பின்னர் மூன்று மொழிகளிலும் 'தலைவி' என்ற தலைப்பில் வெளியிட திட்டமிட்டனர். ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு நவம்பர் 2019 10 அன்று தொடங்கி திசம்பர் 2020 இல் நிறைவடைந்தது. கோவிட்-19 பெருந்தொற்று அதிகரிப்பு காரணமாக மகாராட்டிராவில் பொது முடக்கம் காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.[4][5] இது பின்னர் தலைவி என்ற தலைப்புடன் 10 செப்டம்பர் 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது.[6] ₹100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் முதல் வாரத்தில் ₹4.75 கோடி ரூபாய் வசூல் செய்தது.[3] வரவேற்புபடம் வெளியானதில் கலவையான வரவேற்பைப் பெற்றது.[7] திரைப்பட விமர்சகர்கள் திரைக்கதையை அரைவேக்காட்டு என்றும், மிகை நாடகம் என்றும் விமர்சனம் செய்தனர். சிலர் கங்கனா , அரவிந்த்சாமியின் வலுவான நடிப்பைப் பாராட்டினர்.[8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia