திருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Thrikaripur State Assembly constituency, மலையாளம்: തൃക്കരിപ്പൂർ നിയമസഭാമണ്ഡലം), முன்பு நீலேசுவரம் தொகுதி கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] 2021 சட்டமன்றத் தேர்தலின்படி, தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் எம். ராஜகோபாலன் உள்ளார்.[2]
உட்பட்ட பகுதிகள்
திருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதுள்ள உள்ளூராட்சி பிரிவுகளை பின்வரும் பட்டியல் கொண்டுள்ளது: [3][4]
2008-ஆம் ஆண்டு மறுசீரமைப்பிற்கு முன்பு திருக்கரிப்பூர், கிழக்கு எளேரி, மேற்கு எளேரி, கய்யூர்-சீமேனி, பீலிக்கோடு, படன்ன, வலியபறம்பு ஆகிய ஊராட்சிகளும், கண்ணூர் மாவட்டத்தில் தளிப்பறம்பு வட்டத்தில் உள்ள கரிவெள்ளூர்-பெரளம், பெரிங்ஙோம்-வயக்கரை, காங்கோல்-ஆலப்படம்பு ஆகிய ஊராட்சிகளையும் கொண்டிருந்தது. [5]
சட்டமன்ற உறுப்பினர்கள்
இத்தொகுதியின் கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனைவரும் பின்வருமாறு: