திருக்குறள் (திரைப்படம்)
திருக்குறள் - (திருவள்ளுவருடன் திரைப் பயணம்) என்பது இளையராஜா இசையில், ஏ. ஜே. பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 2025ஆம் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் கதை திருக்குறள் உருவான காலகட்டத்தில் நடப்பதாக உள்ளது. நடிகர்கள்
தயாரிப்புஇப்படத்தின் தொடக்கம் நவம்பர் 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.[2] காமராசர் வாழ்க்கை வரலாற்றை காமராஜ் என்னும் திரைப்படமாக இயக்கிய ஏ. ஜே. பாலகிருஷ்ணன், திருக்குறளைப் பற்றிய இப்படத்தை இயக்கியுள்ளார். 2024இல் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியில், இப்படம் திருவள்ளுவரைப் பற்றியில்லாமல் திருக்குறளைப் பற்றியது என்று குறிப்பிட்டார்.[3] இப்படத்தின் முன்னோட்டம் சூன் 9, 2025 ஆம் நாள் வெளியானது.[4] இசைஇப்படத்தில் அனைத்துப் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார் இளையராஜா. விமர்சனங்கள்தினமலர் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "படத்தின் முடிவில் வரும் போர்க்களக் காட்சிகள் மற்றும் மதுரை இலக்கியச் சங்கத்தில் திருவள்ளுவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஆகியவற்றை இயக்குநர் பாலகிருஷ்ணன் காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும்படியாக இருந்தது" என்று எழுதி இந்து தமிழ் திசை வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "திருக்குறளின் மேன்மையை சிறந்த பொழுதுபோக்குப் படமாகக் கொடுத்திருப்பதற்காகவே இப்படத்தைக் குடும்பத்துடன் காணலாம்" என்று எழுதினர்.[6] தினத்தந்தி வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "திருவள்ளுவர் காலத்தை கண்முன் நிறுத்தி, அதில் காதல், மோதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை புகுத்தி ரசிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். திருக்குறள் - பெருமை." என்று எழுதினர்.[7] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia