திருக்குறுந்தாண்டகம்

அனுமன் இலங்கையை எரியூட்டுகிறார், ராஜா ரவி வர்மா ஓவியம்.

திருக்குறுந்தாண்டகம் (Tirukkuruntantakam) என்பது வைணவ சமயத்தின் பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரருளிய நூலாகும்.[1][2][3] இது தாண்டகம் என்ற செய்யுள் வகையைச்சார்ந்து இயற்றப்பட்டதாகும்.

பெயர்க்காரணம்

பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம். ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள் வந்தால் அது குறுந்தாண்டகம் என்றுரைப்பர்.[4][5] திருக்குறுந்தாண்டகம் என்பது வைணவக்கடவுளைப் பற்றிய செய்யுளாதலால் 'திரு' என்று பெயர் தொடங்குகிறது[6].

நாலாயிரத்திவ்யபிரபந்தத்திரட்டில் பங்கு

இது நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 2032 முதல் 2051 வரையிலான பாடல்கள் இரண்டாவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் 20 பாடல்கள் உண்டு[7].[8]

திருக்குறுந்தாண்டகம் முதற்செய்யுள்

நிதியினைப் பவளத் தூணை
நெறிமையால் சினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக்
கண்டுமுன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி
வணங்கிஎன் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட
தொண்டனேன் விடுகி லேனே. [9]

உசாத்துணை

  1. Dalal, Roshen (2010). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin Books India. p. 417. ISBN 978-0-14-341421-6.
  2. Literary Heritage of the Tamils (in ஆங்கிலம்). International Institute of Tamil Studies. 1981. p. 230.
  3. RAMANUJAN, S. R. (2014-08-13). THE LORD OF VENGADAM (in ஆங்கிலம்). PartridgeIndia. p. 95. ISBN 978-1-4828-3462-8.
  4. Zvelebil, Kamil (1974). Tamil Literature (in ஆங்கிலம்). Otto Harrassowitz Verlag. p. 101. ISBN 978-3-447-01582-0.
  5. Peterson, Indira Viswanathan (2014-07-14). Poems to Siva: The Hymns of the Tamil Saints (in ஆங்கிலம்). Princeton University Press. p. 80. ISBN 978-1-4008-6006-7.
  6. http://www.rmrl.in:8000/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=44857[தொடர்பிழந்த இணைப்பு]
  7. http://saranagathi.org/blogs/books/thirukurunthandakam/
  8. Cutler, Norman (1987-05-22). Songs of Experience: The Poetics of Tamil Devotion (in ஆங்கிலம்). Indiana University Press. p. 3. ISBN 978-0-253-11419-8.
  9. திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம் 1
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya