திருப்பல்லாண்டு (வைணவம்)
திருப்பல்லாண்டு பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீவில்லிபுத்தூர்ச் சேர்ந்த பெரியாழ்வார் பாடிய நூல் ஆகும். இது 12 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதல் ஆயிரம் பாக்களில் முதல் 12 பாடல்கள் திருப்பல்லாண்டு பாடல்கள் ஆகும். வைணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றும்.கோவில்களில்.காலை வேலையில் பாடப்படுகிறது. [1] [2]சாற்றுமுறை எனும் வைணவ தினவழிபாட்டின் தொடக்கத்தின் போதும் முடிவின்போதும், வைணவ கோயில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாட்டின் போதும் புறப்பாடு முடிந்து திருக்கோயில் திரும்பும்போதும் இப்பல்லாண்டு இன்றளவும் பாடப்பட்டே பின்னரே சுவாமி திருக்கோயிலுக்குள் எழுந்தருள்கிறார். வடமொழி வேதங்களுக்கு "ஓம்" எப்படி ஆதாரமாக இருந்து தொடக்கமும் முடிவும் ஆவதுபோல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு இந்தத் 'திருப்பல்லாண்டு' விளங்குகிறது. பாடலின் பின்புலம்பெரியாழ்வார் ஒருமுறை பாண்டிய மன்னன் சமய விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு. அழைப்பு விடுத்தார்.இந்த விவாதத்தில் பல கவிஞர்கள், பல சமய அறிஞர்கள் கலந்து கொண்டனர்.அனைத்து சமய அறிஞர்களையும் வீழ்த்தினார். ஆதலால்மன்னன் மனமகிழ்ந்து ஆழ்வாரை ஒரு யானையின் மீது அமர்த்தி திருவீதியுலா காணச்செய்தார். பிறகு மன்னரால் கௌரவிக்கப்பட்டார், அங்கு தலைநகரைச் சுற்றி அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர், திருமால் நேரடியாக பூமிக்கு கருட வாகனத்தில் இறங்கினார். திருமாலுக்கு கண்ணேறு பட்டுவிடுமோ என்று எண்ணி அஞ்சினார். திருமால் கருட வாகனத்தில் மிகவும் அழகாக இருப்பதை கண்டு இருப்பதையும் கண்டும் அஞ்சினார். கவலையுற்ற பெரியாழ்வார், திருமாலுக்கு பாதுகாப்பும், பல்லாண்டு தொண்டு செய்யவும் வேண்டி வேண்டுவதாகத் திருப்பல்லாண்டு கொண்டு அவரைப் போற்றினார். [3] [4] [5] இவரது பக்தி மேன்மையைக் கண்ட, பின் வந்த வைணவப் பெரியோர்கள் ஆழ்வார்கள் வரிசைக்கிரமத்தில் ஏழாமவராக வரும் பெரியாழ்வாரின் பாடல்களை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் முதற்பாடல்களாகத் தொகுத்தனர். பாசுரம்திருப்பல்லாண்டு பன்னிரண்டு பாடல்களைக் கொண்டது. இந்த படைப்பில் விஷ்ணுவின் சக்ராயுதமும் பாஞ்சசன்யமும் திருமாலும், அவரது ஆயுதங்களின்.பண்புகளை போற்றுகிறார்: [6] [7]
மேற்கோள்கள்
![]() விக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/திருப்பல்லாண்டு |
Portal di Ensiklopedia Dunia