திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம்திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளியில் இயங்கும் ஒரு தமிழ்ச் சங்கம். 1956 மார்ச் 11 இல் இது அமைக்கப்பட்டது. பின்னணி20ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் திருச்சிராப்பள்ளியில் திருக்குறள் அன்பர்கள் குழுவாக இருந்து அதில் அறிஞர்களும், ஆன்றோர்களும் பலர் அங்கம் வகித்துள்ளனர். அவர்கள் கூடும் போதெல்லாம் திருக்குறள் மேன்மை பேசி வந்துள்ளனர். குறள் அன்பர்கள் குழு திருச்சிராப்பள்ளி, புரோமெனண்ட் தெருவில் இருந்த, திரு. கு. விசுவாதன் இல்லத்தில், கூடினர். அக்குழுவை, தெ. துரைராசபிள்ளை முன்னிருந்து இயக்கினார், பின்னர் அக்குழு, குறள் அன்பர்கள் குழு உறுப்பினராகிய தி. செ. மு. அ. பாலசுப்பிரமணியம் செட்டியார் இல்லத்தில் கூடி திருக்குறள் சிந்தனைகளைக் கலந்து வந்தது. சங்கம் தோன்றிய ஆண்டு1956 சனவரி 4 இல் குறள் அன்பர்கள் குழு கு. விசுவநாதன் இல்லத்தில் கூடியபோது, திருச்சிராப்பள்ளியில், ஒரு தமிழ்க் கல்லூரி தொடங்கவும், தமிழ்ச்சங்கம் அமைக்கவும் உரையாடிக் கலைந்தனர். 1956 மார்ச் 11 இல் திருவரங்கத்தில் உள்ள வாசுதேவபுரத்தில், இராஜபவனம் என்னும் வளமைனையில் திருவள்ளுவர் தி. பொ. மாணிக்கவாசகம் பிள்ளை தலைமையில் கூடிய குழுக் கூட்டத்தில் தெ. துரைராச பிள்ளை முன்மொழிய திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் தோற்றம் பெற்றது. அரசு சங்கச் சட்டவிதிப்படி 1956 டிசம்பர் 3 அன்று ஆவணக் களத்தில் பதிவுசெய்யப்பெற்றது. 1957 சனவரி 13 ஆம் நாள் கூடிய, முதல் ஆண்டு நிறைவில், ‘தமிழ்ச்சங்கம்’ முறைப்படி 1957 மார்ச் 11 இலேயே தொடங்கப்பெற்றாலும், திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்க நாளே, தமிழ்ச் சங்க தொடக்க நாள் என்று தீர்மானித்து, அதைப் பதிவு செய்தனர். அந்நாளில் ‘தமிழ்ச் சங்க ஆண்டு நிறைவுவிழா’ ஆண்டு தோறும் நடத்தவும் முடிவு செய்தனர். சங்கத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தின் முதல் தலைவர் செ. மு. அ. பாலசுப்பிரமணியம் செட்டியார் ஆவார். துணைத் தலைவர் வித்துவான் ஐயன்பெருமாள் கோனார் ஆவார். முதல் செயலாளர் தெ.துரைராச பிள்ளை, பொருளாளர் அ. இராம. சு. சுப்பையா செட்டியார். தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்த, செ. மு. அ. பாலசுப்பிரமணியம் செட்டியார் தமது சொந்தப் பணிகள் காராணமாகத் தலைமைப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். 1956 அக்டோபர் 2 அன்று திருச்சிராப்பள்ளி, மருத்துவர் எட்வர்டு பால்மதுரம் தலைவராக அமர்ந்தார். தொ. மு. நல்லுசாமி, மு, அ. அருணாசலம் செட்டியார் துணைத்தலைவர்களாக இருந்துள்ளனர். தெ. துரைராச பிள்ளை அமைச்சர் பொறுப்பில் தொடர்ந்தார். பேராசிரியர் வே. மா. சம்மனசு துணை அமைச்சர் ஆனார். சு. இராம. சு. சுப்பையா செட்டியார் பொருளாளர் ஆனார். தற்பொழுது (2013) சங்கத்தின் தலைவராக சிவ. ப. மூக்கப்பிள்ளையும், அமைச்சராக சி. சிவக்கொழுந்தும் இருந்து வருகின்றனர். தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள்முதல் சிறப்பு நிகழ்ச்சி 1956 இல் நடைபெற்றுள்ளது. அதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தி. மூ. நாராயணசாமி பிள்ளை தலைமை ஏற்றுள்ளார். அந்நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கட்கு, பொற்பதக்கம் அணிவித்துப் பாராட்டினார்கள். திருச்சிராப்பள்ளியின் அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த குலாம் முகம்மது பாட்சா பரிந்துரையின்படி, தமிழ்நாடு அரசு திருச்சிராப்பள்ளி மேலரண் சாலையில், கெயிட்டி திரையரங்கிற்கு முன் இருந்த இடத்தை 1959 ஆகத்து 25 அன்று நிரந்தரக் கட்டிடம் கட்டிக் கொள்ள வழங்கியது. அப்பொழுது சென்னை மாநில முதல் அமைச்சராக இருந்த கு. காமராஜ் அவர்களால் 1959 செப்டம்பர் 17 அன்று தமிழ்ச்சங்க கட்டிடத்திற்கு கால்கோள் செய்து சிறப்பித்துள்ளார். அனைத்து வசதிகளுடனும் கூடிய தமிழ்ச்சங்க கட்டிடத்தைப் முதலைமைச்சர் கு. காமராஜ் 1961 மே 7 இல் திறந்து வைத்துள்ளார்கள். சென்னை மாநிலக் கல்வி அமைச்சராக இருந்த எம். பக்தவச்சலம் தமிழ்ச்சங்க நூல் நிலையத்தை 1961 செப்டம்பர் 28 அன்று திறந்து வைத்துள்ளார். பாராட்டு விழாதமிழ்ச்சங்கத்தில் 1967-இல் சென்னை மாநில முதல் அமைச்சராக இருந்த அண்ணாவிற்கு, ஒரு பாராட்டு விழா நடத்தியது. 1973-ஆண்டு முதல் தமிழ்ச்சங்கத்தில் கம்பருக்குப் புகழ்விழா எடுத்துவருகின்றது. 1974 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் இணைவேந்தர் இராஜா சர் முத்தையா செட்டியார் தலைமையில், தமிழிசை விழா நடைபெற்றது. 1975 ஆம் ஆண்டு திருசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு பொற்கிழி ஆயிரம் வழங்கப்பெற்றது. 1979 அக்டோபர் 14 மருத்துவர் ஜி. விசுவநாதம் பிள்ளை தமிழ்ச்சங்கத்தில் முதல் தமிழ்ச்சங்க அமைச்சர் தெ .துரைசாமி பிள்ளையின் திருவுருவச்சிலையினைத் திறந்து வைத்தார். 1979 நவம்பர் 28 அன்று தமிழ்நாடு அரசு மேலவைத் தலைவராக இருந்தகு ம.பொ.சிவஞானத்திற்கு பாராட்டுவிழா நடைபெற்றுள்ளது. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின், முதுமுனைவர் பட்டம் பெற்ற கி.ஆ.பெ.விசுவநாதத்திற்கு சங்கத்தில் 1979 டிசம்பர் 22 அன்று பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் நாடு முதலமைச்சராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரனுக்கு 1981 மே 24 அன்று போற்றுதல் விழா நடத்தப்பெற்றது. தமிழ்நாடு முதலைமைச்சராக இருந்த மு. கருணாநிதிக்கு உலகத திருக்குறள் மாநாட்டில் 2000 சனவரி இல் பாராட்டிதழ் வழங்கப்பட்டது. தமிழ்ச்சங்க விருது பெற்றவர்கள்தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் பொற்கிழி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia