திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (Tiruvannamalai Regional Transport Office - RTO) இந்திய நாட்டில், தமிழ் நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதாகும். தலைமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. அமைவிடம்திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ளது இந்த திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகும். இதன் வாகனப் பதிவு குறியீடு [TN 25] ஆகும். இதன் கீழ் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய தாலுகாக்கள் அமைந்துள்ளது. மோட்டார் வாகன சட்டம்வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (Regional Transport Office, RTO) இந்தியாவின் மோட்டார் வாகனச் சட்டம், 1988இன் பிரிவு 213 (1)இன் கீழ் அமைக்கப்பட்ட மாநில அரசுகளால் நிருவகிக்கப்படும் அலுவலகம் ஆகும். இந்தச் சட்டத்தின் பல்வேறு விதிகளை செயற்படுத்துவது இதன் பொறுப்பாகும்.இது மாநில அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்குகின்றது. இந்தியாவில் பதிவு இலக்கத்தகடுகளையும் ஓட்டுனர் உரிமங்களையும் வழங்குகிறது. இந்த அலுவலகத்தின் முதன்மை நோக்கங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளவை:-
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia