செங்கம்
செங்கம் (ஆங்கிலம்:Chengam) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் வட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியம், செங்கம் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய சிறப்பு நிலைப்பேரூராட்சியும் ஆகும். இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். தமிழகத்தில் அதிக மாம்பழம் விளையும் மாவட்டம் கிருஷ்ணகிரி. இதில் ஊத்தங்கரையில் இருந்து 80% மாம்பழங்கள் விளையப்படுகிறது.[2] வரலாறுசங்ககால இலக்கியமான பத்துப்பாட்டில் இடம்பெற்ற மலைபடுகடாம் என்ற நூலில் பல்குன்றக்கோட்டத்தைச் சேர்ந்த செங்கத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னன் நன்னன்சேய் நன்னன் ஆண்டதாக குறிப்பிடுகின்றது. இதனை மெய்ப்பிக்கும் வகை பல அரிய வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள், நடுகற்கள் கிடைத்திருக்கின்றன. நன்னன் ஆட்சிக்குட்பட்ட நவிர மலை என்பது தற்போது சவ்வாது மலை பகுதியைக்குறிக்கும் என்று சிலரும் கடலாடிக்கு அருகிலுள்ள பர்வதமலையைக்குறிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.[3] செங்கம் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அமைவிடம்புதுச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூரு வழித்தடத்தில் அமைந்த செங்கம் நகராட்சி, திருவண்ணாமலையிலிருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் வடக்கே போளூர் 49 கி.மீ. மற்றும் ஆரணி 75 கி.மீ. தொலைவிலும், மேற்கே திருப்பத்தூர் 52 கி.மீ. தொலைவிலும், சாத்தனூர் அணையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், ஊத்தங்கரையிலிருந்து 31 கி.மீ. தொலைவிலும் மற்றும் கிருஷ்ணகிரியிலிருந்து 81 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. போக்குவரத்துசாலை வசதிகள்செங்கம் நகரில் சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது. செங்கம் நகரில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
ஆகிய முக்கிய சாலைகள் செங்கம் நகரத்தை இணைக்கிறது. பேருந்து வசதிகள்செங்கம் நகரில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம் மற்றும் அரசியல்8 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி செங்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] சட்டமன்றத் தொகுதி
வருவாய் வட்டம்திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் செங்கம் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தில் 121 வருவாய் கிராமங்களும் மற்றும் 2,80,581 மக்கள்தொகை கொண்டது. இந்த வட்டத்தில் செங்கம் நகராட்சி மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,160 வீடுகளும், 54278 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.82% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
புவியியல்இவ்வூரின் அமைவிடம் 12°18′N 78°48′E / 12.3°N 78.8°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 272 மீட்டர் (892 அடி) உயரத்தில் இருக்கின்றது கோவில்கள்செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனது 700 ஆண்டிற்கும் மேல் பழமையான கோவில் என்று கருதப்படுகின்றது.[9] இக்கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் வளர்பிறையில் மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும். ![]() செங்கம் நகரில் செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் என்னும் சப்தமாதர் ஆலயம் மிகவும் பழமையான ஆலயம் உள்ளன. பல நூற்றாண்டுகள் பழமையான திருக்கோவில் இது. பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆம் நீண்ட கருவறை கூடிய திருக்கோவில் இது. விஜயநகரப் பேரரசர்களின் கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன. பல தமிழ் ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கோவிலில் ஆடி மாதத்தில் வரும் ஆடி மூன்றாம் வெள்ளிக் கிழமை அன்று ஊரணி பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. மிகவும் பழமையான இத்திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் கன்னிமார்களின் பல பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அதில் குறிப்பிட்ட சில பெயர்கள் வளையல் காரி என்றும் சப்தகன்னியர் என்றும் காளியம்மன் திருக்கோவில் என்றும் செங்கொடி அம்மன் என்றும் மற்றும் பல திருப்பெயர்களை கொண்டுள்ளது. இவ்வாலயத்தில் பழமையான மூலவர் சிலைகள் சப்தகன்னியர்கள் வீரபத்திரர் விநாயகர் சிலைகளை மட்டுமே ஆகும். ஆனால் உற்சவர் சிலை காளி சிலை மட்டுமே ஆகும். பழமையான பழைய மூலவர் சிலைகள் சிதிலமடைந்து விட்ட காரணத்தினால் தற்போது சிலைகள் புதிதாக செய்யப்பட்டு விட்டது. மிகவும் பழமையான இத்திருக்கோவில் பல வரலாற்றுச் சுவடுகளை தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறது. ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia