கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பென்னாத்தூர் (ஆங்கிலம்:Kilpennathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் வட்டம் மற்றும் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். கீழ்பென்னாத்தூர் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அமைவிடம்இந்த நகரம் பெங்களூரு - திருவண்ணாமலை - புதுச்சேரி செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையிலிருந்து 16 கி.மீ. உள்ள கீழ்பெண்ணாத்தூர் அருகே அமைந்த தொடருந்து நிலையம் திருவண்ணாமலை ஆகும். இதன் கிழக்கில் செஞ்சி 18 கி.மீ.; வடக்கில் வேட்டவலம் 23 கி.மீ. தொலைவில் உள்ளன. பேரூராட்சியின் அமைப்பு12.44 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 69 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கீழ்பென்னாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[2] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3152 வீடுகளும், 13,718 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4100 மற்றும் 93 ஆகவுள்ளனர்.[3] நிர்வாகம் மற்றும் அரசியல்
கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி, கீழ்பென்னாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia