திருவல்லம் வில்வநாதேசுவரர் கோயில்
வில்வநாதேசுவரர் கோயில் (Vilwanatheswarar temple) என்பது திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ஆகியோரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1] அமைவிடம்இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் திருவல்லம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது திருவலம் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்டிருந்தது. [2] தல வரலாறுகஞ்சன் மலையிலிருந்து திருவல்லத்திற்கு இறைவனை அபிசேகம் செய்ய தீர்த்தம் கொண்டுவரும் அர்ச்சகரை, கஞ்சன் என்பவன் தொல்லை செய்தான். சிவபெருமானின் வாகனமான நந்தி தேவன் கஞ்சனை எட்டு பாகங்களாக கிழித்தார். சிவபெருமானிடம் இறவா வரம் பெற்றிருந்த கஞ்சன் அவ்விடம் விட்டு ஓடிவிட்டார் என்று கோயிலின் தல வரலாறு கூறுகிறது. அத்துடன் இறவாமல் இருக்கும் கஞ்சன் மீண்டும் வருகிறானா என்பதை கண்காணிக்க நந்தி தேவர் கோயிலின் வாசலை நோக்கியவாறு இருக்கிறார். [2] அமைப்புஐந்து நிலை ராஜகோபுரத்துடன், மூன்று திருச்சுற்றுடன் இக்கோயில் உள்ளது. [2] மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia